Saturday, August 10, 2013

பிறந்த நாள்

நேரில் உங்களுக்கு முகம் கொடுத்த பேச முடியாத நண்பர்களில் நானும் ஒருவன். மறைமுகமாக நிறைய பேசி கொண்டேன். கடந்த 6ம் தேதி உங்கள் பிறந்த நாள். காலையில் வாரண்டாவில் நின்றிருந்தேன். நீங்கள் வந்தீர்கள் , உங்கள் இமை முடிகளை சீர் செய்து . உதடுக்கு சாயம் பூசி , முகில் நிறத்தில் உடையணிந்து , கூந்தல் நிறைய மல்லிகை பூக்களை வைத்து , தேவன் மகளாகவும் தேவதையாக இருந்தீர்கள். அப்போது உங்களுக்கு திருமணமென்றாலும் நம்ப கூடியவனாக இருந்தேன். மாறாக நீங்கள் சம்மதம் தெரிவித்தால் வரப்போகும் பிரச்சினையை பிறகு பார்க்கலாமென்று உங்களை திருமணம் செய்யவும் துணிந்திருப்பேன். அவ்வளவு அழகு நீங்கள். மன்னிக்கவும் ஒரு நண்பனாக இப்படி சொன்னதற்கு. . மதியம் இனிப்புகள் பெற்றேன். வாழ்த்து சொல்ல வார்த்தைகளால் தடுமாறினேன். அன்று முழுவதும் நண்பர்கள் உங்களுக்கு பிறந்த நாள் என்று கொண்டாடி கொண்டிருந்தனார். பொறாமையாக இருந்தத நான் ஏழையாக ஒதுங்கி நின்றேன். . பிறகு இரவு 9 மணிக்கு இன்னும் பேருந்து நிலையத்தில் இருப்பதாக சொன்னீர்கள். அப்படியே நொறுங்கி போய் விட்டேன். உங்களுக்கு எதாவது பைத்தியமா . எதற்காக அப்படி செய்ய வேண்டும். உங்கள் நண்பருக்கு விருந்து அளிந்தீர்கள் சரி , எதற்காக அவ்வளவு நேரம் எடுத்து கொள்ள வேண்டும். அவ்வளவு அழகாக உடை அணிந்து விட்டு , அங்கே எப்படி தனியாக நின்று கொண்டிருந்தீர்கள். அன்று உங்களுக்கு பிறந்த நாள். உங்களுக்கு எதாவது நேர்ந்து விட்டால் நான் என்ன செய்வேன். ஆண்களை குறை சொல்ல வில்லை. அழகாக இருந்தால் ரசிக்க செய்வார்கள். ஆனால் வேறோரு ஆடவன் வேறோரு நோக்கத்தோடு உங்களை பார்த்து ரசிப்பது ஏற்று கொள்ள மாட்டேன். என் மனம் கசங்கி விடும். உங்களை யாருக்கும் தெரியமால் ஒரு சிப்பிக்குள் முத்து போல் பாதுகாக்க ஆசை. ஆனால் எனக்கு அந்த உரிமை கிடையாது. உடனே சென்று என் கடவுளிடம் மன்றாடினேன். நீங்கள் நல்லபடியாக வீடு அடையவேண்டும் மென்று. கஷ்டமாக இருந்தது. அம்மா பூ கட்டி கொண்டிருந்தாள் . உடனே சென்று அம்மா மடியில் படுத்து கொண்டேன். அம்மா எதோ எதோ கேட்டாள். நினைவேயில்லை. ஒன்றுமே கேட்கவில்லை. என் மனம் உங்களை நினைந்து கொண்டிருந்தது. நீங்கள் நல்ல படியாக வீடு அடைய வேண்டும் மென்று. பிறகு அந்த நன்மை நடந்தது. நீங்கள் நல்ல படியாக திரும்பிய நிகழ்வு. பிறகு களைப்பு கலைந்து அம்மாவோடு சேர்ந்து பரிசுகள் திறந்து பார்ப்பதற்காக சொன்னீர்கள் . நன்றி திருப்தியானேன். பிறகு உறங்க சென்றேன்.

No comments:

Post a Comment