Friday, October 25, 2013

She s child hood

*. உங்க அம்மா பின் சமையல் அறையில் மீன் கொழம்பு தயார் செய்வதற்கு இடையில் வலி அதிகமாகி அவசரமாக ஹாஸ்பிடல் போக அந்த பொன் காலையில் இரண்டாவது பொண்ணு பிள்ளையாக சிறகுகளற்ற தேவதையாக நீங்க பிறந்திருப்பீங்க உங்க முகத்தை பார்த்து உங்க அம்மாவிற்கு உடம்பால் ஏற்பட்ட அத்தனை வலியும் மறந்திருப்பாங்க . . . அந்த கொஞ்ச நாளைக்கு அக்கா பாப்பா எப்படி சிரிக்கிற பாருங்க அக்கா பாப்பா எப்படி அழற பாருங்க யென்று யாராவது உங்களை பார்க்க வரவாங்க கண் வைச்சிருப்பாங்க . . . அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கலை அப்போ நீங்க எப்படி இருந்திருப்பீங்க நான் பார்க்க முடியவில்லை . . *****. அப்போயெல்லாம் அம்மா மடியிலே தான் இருப்பீங்க . . . உங்க அம்மாவை வியாபாரம் செய்ய விடமாட்டிங்க உங்கள் கைக்கு கிடைக்கிற பிளாஸ்டிக் பாக்ஸ்களை எடுத்து பார்த்து கீழே போட்டுட்டு கவிதையாக சிணுங்கலுடன் சிரிப்பீங்க . . . " அட அட போச்சே உன்னை வைச்சுகிட்டு " அம்மா மென்மையாக கண்டிப்பாங்க . . . பிறகு உங்களோடு சேர்ந்து அவங்க கடையை எப்படி பார்த்துக்கா போறாங்க . . . *.மண் பிசைந்து கேசத்தில் அப்பி உதடு பிதுக்கி அக்கா மேல் மண் வாரி போட்டு அக்காவோடு முடியை இழுத்து கட்டு பிடுத்து மண்ணில் உருண்டு சண்டையெல்லாம் போட்டு இருப்பீங்க . . . . *.அப்புறம் உங்களுக்கு ஒரு சின்ன விழா நடந்திருக்கும் நீங்கள் எது கேட்டாலும் வாங்கி தரேன் சொல்லிருப்பாங்க . . . உங்கள் முடிகளை எடுத்திருப்பாங்க . . . காது குத்திருப்பாங்க . . . "அட புள்ள துள்ளிற போற புடிங்களேன் அவளே " அம்மா துடிச்சிருப்பாங்க . . பொம்மையெல்லாம் நிறைய வாங்கி தந்திருப்பாங்க அதெல்லாம் தூக்கி போட்டுட்டு அடம் பிடிப்பீங்க கம்மலை கழட்ட சொல்லி நீங்க சொன்னா பிறகு அவங்க கேட்டு தான் ஆகனும் . . . . *. வெள்ளை கவுன் தலையில் மென் கீரிடம் நிலம் உரசும் வலை யென பரிசுத்தமான தேவதை உடையில் அந்த தேவன் மகளா ஒவ்வோரு பிறந்தநாளை கொண்டாடியிருப்பீங்க அப்போயெல்லாம் யாரவது சொல்வாங்க " பொண்ணு புள்ள பெரிசாயிட்டா உனக்கு ஏத்தவனை உங்க அப்பா எங்கேயிருந்து கொண்டு வர போறாரோ" . *." போடி நாயே பேயே " எல்லாம் அம்மாவை திட்டி இருப்பீங்க . . . "முளைக்கவேயில்லை புள்ளைக்கு பேச்சை பாரு " அம்மா நாலு அடி கொடுத்திருப்பாங்க . . . ஓடி போய் அப்பாவை கட்டிட்டு அழுதிருப்பீங்க. பிறகு அப்படியே அப்பா வோடு தூங்கியிருப்பீங்கா . . . அம்மா ஒரு துளி குறையாத அன்போடு கேட்பாங்க அப்பா கிட்ட "புள்ள தூங்கிட்டளா ? " அந்த அன்பு அப்போ உங்களுக்கு தெரிந்திருக்காது . . . . *."அது அக்காவுக்கு மட்டும் தானா?" என்ன வாங்கிட்டு வந்தாலும் அடம் பிடிப்பீங்க . . இதனால் உங்களுக்கும் உங்க அக்காவுக்கு சண்டை அதிகமாக வந்திருக்கும் நீங்க சொல்றதை தட்ட முடியுமா அம்மா சொல்வாங்க . . . "அது அவளுக்கே கொடுத்து தொலைச்சிரு " . *. நீங்க ஸ்கூல் போகும் தொடக்கத்தில் ஸ்கேல் , பென்சில் நிறைய தொலைச்சிருப்பீங்க . . . உங்களை சமாளிக்க முடியுமா வேற வழி அப்பா உங்களை அடிப்பாங்க . . முதல் அடிக்கே அலறி இருப்பீங்கா பயங்கரமா அழுதிருப்பீங்கா இரண்டாவதாக ஒரு அடி உங்க அப்பா உங்களை அடித்திருக்கமாட்டார் அது ஏன் யென்று அப்போ உங்களுக்கு தெரியவே தெரிந்திருக்காது . . . *. ஒவ்வொரு விடுமுறையும் வீட்டில் சந்தோஷமாக உணர்ந்திருப்பீங்க . . . ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஸ்கூல் போவதில் அம்மா டிபன் பாக்ஸ் தரதிலிருந்து அப்பா ஸ்கூல் கொண்டு வந்து விட்டு கை காட்டி பிரிவதிலிருந்து ஒரு மென் சோகத்தை உணர்ந்திருப்பீங்க . . . அவங்களை இப்பவே திரும்பி பார்க்கனும் ஏங்கி இருப்பீங்க . . . . *. பிறகு எப்போதொ உணர்ந்திருப்பீங்க உங்க அம்மா அப்பா அக்கா உங்களுக்கு தந்த முத்தங்கள் எச்சில் அல்ல அது அன்பு யென்று . . .

Tuesday, August 27, 2013

Jo 2

என் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணத்தை நான் கடந்திருப்பேன், அந்த சில நொடிகளை . " டேய் நெஜமா ஐ ஆம் கன்சுவிவ் டா " சொல்வீங்க. அந்த சந்தோஷமான நொடிகளுக்கு பிறகு சில மாதங்களுக்கு கழித்து , என் அம்மா கிட்ட போன் ல கேட்பேன் இப்படி , " அவ நைட் யெல்லாம் ஒரு மாதிரி திணுசா படுத்து தூங்கறம்மா , அவளுக்கும் உள்ள குழந்தைக்கும் ஏதாவது ஆயிரும்னு பயப்படறேன், இதனால அதிகமாக சண்டை போடறாம என் கூட . ,எனக்கு எப்படி தூங்குன வசதியோ அப்படி தான் தூங்க முடியும் அப்படிங்கறா எனக்கு வலி அதிகம் ஆயிருச்சு . நா எவ்வளவு கஷ்டப்படறேன் தெரியுமாடா உனக்குனு கேட்கறா , முகத்தை பாவமா வைச்சிட்டு . அவ முகத்தை பார்க்க முடியலை . நீதான்ம்மா எதாவது சொல்லனும்னு " கேட்பேன். அப்படியே கொஞ்சம் நாட்கள் கொஞ்சம் கஷ்டங்களை நம்ம கடந்திருப்போம். பிறகு நாம எதிர்பார்த்த அந்த நாள் வரும் , கொஞ்சமான கஷ்டமான தருணங்கள் . நான் அப்போ வேலைக்கு போயிருப்பேன். " டேய் வலி அதிகமாயிருச்சு , சீக்கிரம் வா முடியலை " சொல்வீங்க. அப்புறம் ஹாஸ்பிஸ்டல்க்கு போவோம். பிறகு கொஞ்ச நேரத்திற்கு நான் தைரியமாக இருந்து ஆகனும். பிறகு ஒரு நல்ல செய்தி . நர்ஸ் வந்து சொல்வாங்க , " உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு . ஆனா நீங்க இப்போ அவங்களை பாக்க முடியாது . அவங்க வலி மயக்கதல உங்களை தான் கண்டபடி திட்டறாங்க " , " என்னையவா எதுக்கு திட்டணும் னு " கேட்பேன். " நீங்க தான் அவங்க வலிக்கு காரணம் அதனால தான் " " என்னனு திட்டறா " நான் கேட்பேன். " நீங்க நாயாம். அப்புறம் ஏதோ ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டனுங்கா. உங்களை பார்க்க allow பண்ண கூடாதுங்கற . நீங்க தனியா வலியோட அவங்களை விட்டுடு போயிடிங்கனு புலம்புறங்கா , என்னைய அப்படியே விட்டுறங்கா , என்னல குழந்தை பெத்துக்கா முடியாதுனாங்க , அக்கா உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்குனு சொன்னா , நம்பவே மாட்டிங்கறாங்கா அண்ணா. இல்லவே இல்லைங்கறாங்க . கை , காலை தூக்க முடியலைனங்கா , அப்புறம் செருப்பு எடுக்க சொன்னங்கா , உங்களை அடிக்கிறக்கமமா " அப்புறம் உங்களை பார்க்க வருவேன். அப்புறம் அந்த குட்டி தேவதையை நான் பார்க்கனும் வருவேன். நீங்க சிரிப்பீங்க . "அவ்வளவு தான்டி இதுக்கு போய் பயந்தட்டா " அப்புறம் நடந்ததெல்லாம் நல்ல விஷயம். அப்புறம் அவளுக்கு பேரானந்தி னு பெயர் வைப்போம். அவ வாழ்க்கை முழுக்க ஆனந்தமா இருக்கனும் அதனால். முக்கியமான விஷயம், ஆனந்தி படு வாலு. இந்தா ஸ்கூலெல்லாம் அவளுக்கு படு போர் ஆம். என் மொபைல் , வண்டி சாவி யெல்லாம் எடுத்து ஒளிச்சு வைக்கறா ஸ்கூல் வேண்டாம்னு . என் பேச்சை கேட்கவே மாட்டிங்கறா. நீதான் அவளை ஸ்கூலுக்கு அனுப்பனும். அவ்வளவுதான்.

Jo wife 1

அப்போயெல்லாம் நீங்க எங்க வீட்டில இருப்பீங்க. உங்களோட சாரீஸ் , சுடிதார்ஸ் , செர்டிபியூகெட்ஸ் யெல்லாம் எங்க வீட்டு பீரோல இருக்கும். உங்களோட பைபிள் என் அலமாரியில் இருக்கும். நீங்க உபயோகிற ஷாம்ப் , ஷோப் யெல்லாம் எங்க பாத்ரூம்ல இருக்கும். நீங்க உபயோகிற எங்க வீட்டு சீப்பு ல உங்களோட சில உதிரங்கள் கவிதையாய் இருக்கும். அப்போயெல்லாம் உங்களை சேலை தான் கட்டணும் சொல்லி பெரிய மனுசியாக்க விரும்பலை. சுடிதார்ல தான் இருப்பீங்க . என் அறை முழுக்க உங்க வாசம் தான் இருக்கும். நீங்க என் மனப்பூர்வ மனைவியாகி விட்டதற்கான நான் அணிவித்த அழகான பொன் சங்கிலி உங்க கழுத்துல இருக்கும். வாரத்தில ஏதோ ஒரு நாள்ல உங்க அழுக்கு சுடிதார் யெல்லாம் சேர்த்து எங்க தங்கச்சியோட பங்கு போட்டு துவைப்பீங்க. பின்னே ராணி மாதிரி ரொம்ப நேரம் குளிப்பீங்க. பிறகு வேற சுடி போட்டு கிட்டு , எங்க தோட்டத்தில பூத்திருக்கிற ரோஜா அல்லது மல்லிகை பூக்களையோ உங்க கூந்தலில் வைச்சுப்பீங்க . . . உங்க முகத்தில் சந்தோஷம் தெரியும். அனிச்சையாக உங்க கன்னத்தில் குழி விழும். அதிகமாக சிரிப்பீங்க. அப்போ யெல்லாம் பயங்கர அழகாக இருப்பீங்க. சின்ன குழந்தைகளாக மாறி இருப்போம். நிறைய விளையாடுவோம். என்னோட மெத்தையில் உங்களுக்கும் உரிமை இருக்கும். அப்படியொரு நாளில் நீங்கள் மெத்தையில் காலை நீட்டி அமர்ந்திருப்பீங்க. உங்க பாதங்களுக்கு பக்கத்தில் நானும் அமர்ந்திருப்பேன். உங்க பாதங்களை நான் மென்மையாக வருடுவேன். நீங்க உடனே கூட இதை செய்வீங்க , உங்க மென் பாதங்களால் என்னோட நெஞ்சிலோ அல்லது வயிற்றிலோ அன்பால உதைப்பீங்க. சிரிப்பீங்க. எங்க அம்மா பார்த்தா கூட தனியா கூப்பிட்டு கேட்பாங்க , " உதைக்கிறலாடா அவ , பொன்னுங்க பையனை உதைக்க கூடாது தெரியுமா, அது தப்பு " , " சரிங்க அம்மா " மட்டும் சொல்வேன். நான் எதையும் கேட்க மாட்டேன். அப்போ உங்க நினைப்பு முழுக்க மனசில இருக்கும். இரவு சாப்பாடு அப்பா , அம்மா சாப்பிட்ட பிறகு , நாம சாப்பிடுவோம். அப்போ யாருக்கும் தெரியுமா , காலை மிதிப்போம் , கிள்ளி விளையாடுவோம். நீங்க பிசைந்து வைச்சா சாப்பாட்டை என் தட்டுல வைப்பீங்க. சாப்பிடுவோம், மெதுவாக சாப்பிட்டு முடிப்போம். அப்படியே இதே மாதிரி கொஞ்ச நாட்கள் போகும். . உங்களுக்கு ஒரு நாள் காய்ச்சல் அடிக்கும். கொஞ்சம் வீரியமான காய்ச்சல் , டாக்டர் கிட்ட போவோம். உங்க இடுப்புல ஊசி போட்ட பின் , வலிக்காம இருக்க பஞ்சால நான் தேய்ச்சு விடுவேன் நினைக்கிறேன் . அப்போ நான் நினைப்பேன் , அன்பிற்காக இந்த உலகத்தில எல்லாமே. உங்களை நானும் , நீங்களும் என்னை எப்போதோ சந்தித்தது இந்த ஈடு இணையற்ற அன்பை பெறுவதற்காக தான் நினைப்பேன். . பின் ஒரு நாள் , அப்போதைய நாள்கள் நாம தனியா ஒரு வீட்ல இருப்போம் நினைக்கிறேன். ஒரு நாள் காலையில் இப்படி கேட்பீங்க , " டேய் சும்மாதான்டா இருக்க வாய்க்கலுக்கு கூட்டுட்டு போடா , எல்லா துணிகளை துவைக்க கொஞ்சம் வசதியா இருக்கும் " பிறகு போவோம் , உங்க உடல் சேலைக்கு பழகியிருக்கும். நீங்க அணிந்த சேலையை தளர்ந்து கிட்டு துணிகளை துவைப்பீங்க. பொன் காலை சூரிய வெளிச்சம் உங்க பின் முதுகில் விழுந்திருக்கும். அழகாக இருப்பீங்க. வறண்ட சிகையாய் உங்க கூந்தல் இருக்கும். முன் சில முடிகள்ல சோப்பு நுரை ஒட்டியிருக்கும் கவிதையாய் இருக்கும் . உங்க பாதி உடைகள் நனைஞ்சு பயங்கர அழகாக இருப்பீங்க. நீங்க என் துணிகளை துவைக்கிறதை பெருமையாக நினைப்பேன். பிறகு உங்க ஈரமான உடைகளை வெயிலை உலர்ந்தி விட்டு எப்போதோ அந்த இடத்தை விட்டு வண்டியில் கிளம்பி இருப்போம். . எப்போவது இரண்டு பேருக்கும் சின்ன மானஸ்தபம் ஏற்படும். சண்டை வருவது சகஜம். சண்டை போடுவோம். நான் வெளியே எங்கயாவது போயிட்டா , வழியில் யெல்லாம் அழுத படி அம்மா வீட்டுக்கு போயிருவீங்க. உங்க அம்மா கேட்பாங்க , " நீதான் அவன் தான் வேணும்னு ஒரு இந்து பையனை போய் கட்டணுன , எல்லாத்தையும் தாங்கிதானே ஆகனும் " நீங்க சொல்வீங்க , "இப்போ கூட அவன் என்னைய ரொம்ப லவ் பண்றான் அம்மா. அவன் இனி மேலும் கண்டிப்பாக என்னை நல்ல பாத்துப்பான். அவன் இப்போ வந்து கூப்பிட்டா போயிருவேன். " பிறகு கொஞ்சம் அழுவீங்க. நானே உடனே வருவேன். உங்க அம்மா மறைமுகமா திட்டுவாங்கா. வெளிப்படையாக கூட. நான் தாங்கிகுவேன். உங்களை திரும்ப கூட்டுட்டு போயிருவேன். இதுக்கெல்லாம் அழுதுட்டு இங்க வரணுமா னு சொல்லி சமதானம் படுத்துவேன். அந்த நாளுக்கு பிறகு எப்பவும் போல தான் நாட்கள் போகும். . பிறகு எப்பவாவது திரும்பவும் நானும் நீங்களும் உங்க வீட்டுக்கு போவோம். நல்ல காஸ்லியான ப்ளைன் புடவை அணிந்திருப்பீங்க. காதுல புது தங்க ஜிமிக்கி யெல்லாம் அணிந்து அழகாக இருப்பீங்க. உங்க முகம் பொலிவா இருக்கும் . உங்க கடைக்கு போவீங்கா , " அப்பா கொஞ்ச நேரத்திற்கு கடை நான் பார்த்துகறேன் " கேட்பீங்க. யாராவது தெரிஞ்சவங்க கடைக்கு வந்து , "நல்லா இருக்கியாம்ம " உன்னை கேட்பாங்க. அந்த நொடிகள் எனக்கு தெரியலை ஆனால் என்னை பத்தி நினைப்பீங்க. .

Friday, August 16, 2013

15.Aug.2013 . A poem about her hus - 2

அன்புள்ள ஜீவிதா . . . , . உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த பொன் காலையை இப்பொழுது ஞாபகபடுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கடந்தும் போகும் ஒரு அற்புதமான நாள் அது. உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்திருக்கும். சின்ன சின்ன ஆபரணங்களால் உங்கள் உடல் மெருகு உட்டப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் மனம் விரும்பிய சேலையோடு கூடிய , அதிகம் சாரிகைகளால் சித்திர வேலைப்பாடு செய்த சேலையை அணிந்திருப்பீர்கள். நீங்கள் எங்கே பார்த்தாலும் உங்கள் அப்பா , அம்மா , அக்கா , தம்பி மற்றும் உறவினர்கள் முகங்கள் மூலம் மகிழ்ச்சியான தருணத்தை உணர்வீர்கள். உங்கள் மென் கைகள் மருதாணியில் சிவந்திருக்கும். உங்கள் கேசத்தை மீறிய மல்லிகை சரம் உங்களை அழகுபடுத்தி காட்டும். எல்லாரும் நினைக்க கூடும் ஜீவிதா. உங்கள் சம்மதம் ஏற்று அந்த பொன் சங்கிலியை உங்கள் கழுத்தில் அணிவித்து உங்களை வாழ்க்கை துணையாக ஏற்கும் அந்த நபர், இந்த வாழ்க்கையை வாழ கொடுத்து வைத்திருப்பதாக. பிறகு உங்கள் சம்மதம் கேட்கப்படும் . அது மேற்பொற்கான சம்மதம் ஏன் எனில் , அவர் எப்போதோ உங்கள் மனதை தொட்டுருப்பார். நீங்கள் முழு வெட்கத்திற்கான புன்னகையை மறைத்து புன் முறுவல் செய்வீர்கள். அவர் பொன் சங்கிலியை அணிவீப்பார். உங்கள் இருவர் மீதும் பூக்கள் விழும். உங்கள் வாழ்க்கை முழுவதும் துயரற்ற மகிழ்ச்சியை வாழ்வதற்கான பிரார்த்தனை நிறைந்த பூக்கள் அது. பிறகு சந்தோஷமாக வீடு அடைவீர்கள். உணவையும் பழங்களை பங்கு போட்டு சாப்பிடுவீர்கள். சின்ன சின்ன விளையாட்டுகள் விளையாடுவீர்கள். அந்த கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் இருவரும் குழந்தைகளாக மாறி போவீர்கள். உங்கள் நண்பர் , வாழ்க்கை நிகழ்வுகள் பற்றியும் அவரிடம் பகிர்ந்து கொள்வீர்கள். அவரும் அனைத்தையும் பகிர்வார். . திருமணம் முடிந்த அந்த ஒரு வாரங்களுக்குள் இந்த சம்பவம் நடக்கலாம். பொதுவான விஷயங்கள் பேசி பகிர்ந்த பிறகு , பரஸ்பரம் காதலை பரிமாறி கொள்வீர்கள். அந்த நாட்களில் நீங்கள் அளவுக்கு மீறிய கண்ணாடி வளையல்களை கையில் அணிந்திருப்பீர்கள். அந்த இரவுகள் உங்கள் வளையல்கள் சலசலக்கும். உங்கள் உடல் சேலைக்கு பழகி கொண்டிருக்கும் . அந்த இரவில் , உங்கள் கணவன் நெஞ்சோடு சாய்ந்திருப்பீர்கள் . அவர் உங்கள் கூந்தலை ஏந்தி இருப்பார். மௌனங்களால் பேசுவீர்கள். அப்போதே அவர் உங்கள் மிதியிருக்கும் காதலே உடனே சொல்ல தோன்றியிருக்கும். அவர் உங்களின் கண்ணாடி வளையல் ஒன்றை கேட்கலாம். நீங்கள் ஒரு அழகான வளையலை தருவீர்கள். உடனே அந்த வளையலை உடைந்து உங்கள் பெயரை தன் இடது கையில் கீறலாம். நீங்கள் துடித்து போகலாம். இரத்ததை துடைத்து அவர் நெஞ்சோடு திரும்ப சாய்ந்து இப்படி கேட்கலாம் : நீங்க காதலிக்குகிறீங்கா எனக்கு புரியுது. அதுக்காக இப்படியா ?. சந்தோஷமாக உணர்வீர்கள். உங்கள் மருதாணி கைகள் உங்கள் கணவரின் முத்தங்களால் நிறையலாம். உங்கள் நெற்றி , புருவம் , கண்கள் , மூக்கு , கன்னங்கள் , உதடுகள் யென அளக்க முடியாத முத்தங்களால் நனையலாம். அப்படி யொரு முத்தத்தை அனுபவித்திருக்கவே மாட்டீர்கள். அந்த இரவு உங்கள் பிரியங்களால் கொண்ட ஊடலுடன் முடிந்திருக்கும். . பிறகொரு ஒரு நிகழ்வு . ஏதோ வொரு நாளின் மதியத்தில் இது நடக்கலாம். நீங்கள் மங்கலான சிவப்பு நிறத்தில் சேலையும் , கறுப்பு நிறந்தில் ரவிக்கையும் அணிந்திருக்கலாம். அறையின் புழுக்கத்தில் உங்கள் உடல் வியர்ந்திருக்கும். உங்கள் முகம் வியர்வையால் தளர்ந்திருக்கலாம். அப்போது கூட நீங்கள் அழகாகயில்லை யென கூறிவிட முடியாது. உங்கள் வறண்ட கேசம் காற்றில் அலை பாய்ந்த படி இருக்கும். வெளியே பாத்திரங்கள் நீங்கள் கழுவுவதற்காக எடுத்து வைத்திருப்பீர்கள். வெறுமனே உங்கள் கணவரிடம் பேசி கொண்டிருப்பீர்கள். உடனே கூட இதை சொல்லலாம் : . " உறப்பட்ட வேலை இருக்கு. நான் போய் வேலையை பார்க்கறேன் " எழுந்து போகும் உங்களின் கையை அவர் பிடிக்கலாம். கொஞ்சம் நேரம் எதாவது பேசு உங்களிடம் கெஞ்சி கேட்கலாம். மெதுவாக அவர் உங்களுக்காக பாட கூட செய்யலாம். " மெதுவா பாடு எதையாவது பனி போல் நீங்கும் சுமையானது " நீங்கள் கன்டிப்பாக பேச வேண்டிய நேரம் அது. அந்த உரையாடல் மிக நெருக்கத்தோடு கூடிய இதழ் முத்தங்களுடன் கூட முடியலாம். . எப்போவதது என்னை சந்திப்பீர்கள் ஜீவிதா . இந்த உலகத்தின் கூரையில் நானும் இருப்பேன். அது ஒரு பொன் மாலையில் நிகழலாம். நீங்கள் செக்-அப் பிற்கு போயிட்டு வருவதாக கூட என்னிடம் சொல்லலாம். நான் புரிந்து கொள்வேன் ஜீவிதா. நல்ல விஷயம் என்று. உங்கள் கணவர் என்னிடம் மரியாதையாக பேசுவார். எனக்கு தெரியும் அவர் மென்மையானவர் யென்று. நலம் விசாரிப்புகளுக்கு பிறகு உங்கள் கணவரோடு சேர்ந்து என்னிடமிருந்து மகிழ்ச்சியாக விடை பெறுபவீர்கள். பிரிந்து செல்லும் போது உங்கள் கணவன் உங்களிடம் பேச காத்திருப்பார். அவர் இதை சொல்லலாம் : "நல்ல ரிபோர்ட் தா சொன்னாங்கா டாக்டர். கன்டிப்பாக எனக்கு இன்னொரு ஜோ கிடைப்பா. " சந்தோஷமான வார்த்தைகள் . அதற்கு நீங்க நடந்த படி சிரிப்பீங்க . அதற்கு பிறகு உங்கள் கணவன் பேசிய எந்த வார்த்தையும் எனக்கு கேட்டிருக்காது. நீங்களும் உங்கள் கணவரும் கொஞ்சம் தள்ளி நடந்து சென்று உலகத்தோடு கலந்திருப்பீங்க. அதற்கு பிறகு சில மாதங்களுக்கு கழிந்து, எனக்கு குழந்தை பிறந்த தகவல் சொல்வீங்கா ஜீவிதா.

Saturday, August 10, 2013

பிறந்த நாள்

நேரில் உங்களுக்கு முகம் கொடுத்த பேச முடியாத நண்பர்களில் நானும் ஒருவன். மறைமுகமாக நிறைய பேசி கொண்டேன். கடந்த 6ம் தேதி உங்கள் பிறந்த நாள். காலையில் வாரண்டாவில் நின்றிருந்தேன். நீங்கள் வந்தீர்கள் , உங்கள் இமை முடிகளை சீர் செய்து . உதடுக்கு சாயம் பூசி , முகில் நிறத்தில் உடையணிந்து , கூந்தல் நிறைய மல்லிகை பூக்களை வைத்து , தேவன் மகளாகவும் தேவதையாக இருந்தீர்கள். அப்போது உங்களுக்கு திருமணமென்றாலும் நம்ப கூடியவனாக இருந்தேன். மாறாக நீங்கள் சம்மதம் தெரிவித்தால் வரப்போகும் பிரச்சினையை பிறகு பார்க்கலாமென்று உங்களை திருமணம் செய்யவும் துணிந்திருப்பேன். அவ்வளவு அழகு நீங்கள். மன்னிக்கவும் ஒரு நண்பனாக இப்படி சொன்னதற்கு. . மதியம் இனிப்புகள் பெற்றேன். வாழ்த்து சொல்ல வார்த்தைகளால் தடுமாறினேன். அன்று முழுவதும் நண்பர்கள் உங்களுக்கு பிறந்த நாள் என்று கொண்டாடி கொண்டிருந்தனார். பொறாமையாக இருந்தத நான் ஏழையாக ஒதுங்கி நின்றேன். . பிறகு இரவு 9 மணிக்கு இன்னும் பேருந்து நிலையத்தில் இருப்பதாக சொன்னீர்கள். அப்படியே நொறுங்கி போய் விட்டேன். உங்களுக்கு எதாவது பைத்தியமா . எதற்காக அப்படி செய்ய வேண்டும். உங்கள் நண்பருக்கு விருந்து அளிந்தீர்கள் சரி , எதற்காக அவ்வளவு நேரம் எடுத்து கொள்ள வேண்டும். அவ்வளவு அழகாக உடை அணிந்து விட்டு , அங்கே எப்படி தனியாக நின்று கொண்டிருந்தீர்கள். அன்று உங்களுக்கு பிறந்த நாள். உங்களுக்கு எதாவது நேர்ந்து விட்டால் நான் என்ன செய்வேன். ஆண்களை குறை சொல்ல வில்லை. அழகாக இருந்தால் ரசிக்க செய்வார்கள். ஆனால் வேறோரு ஆடவன் வேறோரு நோக்கத்தோடு உங்களை பார்த்து ரசிப்பது ஏற்று கொள்ள மாட்டேன். என் மனம் கசங்கி விடும். உங்களை யாருக்கும் தெரியமால் ஒரு சிப்பிக்குள் முத்து போல் பாதுகாக்க ஆசை. ஆனால் எனக்கு அந்த உரிமை கிடையாது. உடனே சென்று என் கடவுளிடம் மன்றாடினேன். நீங்கள் நல்லபடியாக வீடு அடையவேண்டும் மென்று. கஷ்டமாக இருந்தது. அம்மா பூ கட்டி கொண்டிருந்தாள் . உடனே சென்று அம்மா மடியில் படுத்து கொண்டேன். அம்மா எதோ எதோ கேட்டாள். நினைவேயில்லை. ஒன்றுமே கேட்கவில்லை. என் மனம் உங்களை நினைந்து கொண்டிருந்தது. நீங்கள் நல்ல படியாக வீடு அடைய வேண்டும் மென்று. பிறகு அந்த நன்மை நடந்தது. நீங்கள் நல்ல படியாக திரும்பிய நிகழ்வு. பிறகு களைப்பு கலைந்து அம்மாவோடு சேர்ந்து பரிசுகள் திறந்து பார்ப்பதற்காக சொன்னீர்கள் . நன்றி திருப்தியானேன். பிறகு உறங்க சென்றேன்.

Saturday, August 3, 2013

22, ஜூலை,2013 , மெர்சி - அத்தியாயம் 2

நான் என்ன செய்வேன் மெர்சி . உங்கள் பொலிவான உருவம் , வட்ட சிறு முகம் , வாரண்டாவில் உங்கள்நிழல் , உங்களுக்கென்று தேர்ந்து நைந்த உடைகள் , அசைவுகள் , புன்னகை , பார்வைகள் , வார்த்தைகள் யென தினமும் எல்லாம் தரிசிக்கின்றேன் . அது தான் பிரச்சினை . தங்களை தினமும்ரசிக்கும் கலைஞானாக என்னால் என்ன செய்ய முடியும் மெர்சி காதலிக்கதான் முடியும். தங்கள் இதை ஏற்றுக் கொள்ள போவதில்லை புரிகிறது . நீங்களே சொல்லுங்கள் , தங்கள் நடந்து வரும் பாதைகளில் இருபுறமும் நின்று உங்கள் பொன் பாதங்களுக்கு தேவ தூதர்கள் மலர்கள் தூவுவதாக நான் கற்பனை கொள்ளும் அளவிற்கு தேவனின் மகளாக இருக்கிறீர்கள். உங்கள் அழகை தேவர்களே ஆராதிக்கும் போது, நான் ஒரு சிறு மனிதன் . உங்களோடு நெருங்கி பழகும் பாக்கியம் பெற்றவன் எப்படி என்னால் உங்களை காதலிக்கமால் இருக்க முடியும். . இது எப்போதோ முடிவு செய்ய பட்டிருக்கிறது மெர்சி . கடந்த எட்டாம் தேதி , என்னோடு படித்த தங்களின் தோழியுமான அவளின் தந்தை மரணத்தை பற்றி யாரோ ஒரு பெண்ணிடம் கூறி இலேசாக கசங்கவும் செய்தீர்கள். அப்பொழுதுதிருந்தே என் மனம் வெளிப்படையாக உங்களை ஏற்று கொள்ளவே செய்தது. பிறகு மனமுவந்து பேசி கொண்டோம். பேச பேச பிரியங்கள் கூடி கொண்டே போகும் பெண்ணாகிவிட்டீர்கள் நீங்கள் . எல்லாம் பேசி தெரிந்துகொண்டோம். நெருக்கமாக பழக செய்தோம். உங்களுக்கேற்ற இளவரசன் நான் அல்லாத போதும் , அந்த இளவரசனுக்காக உங்கள் காதலனுக்காகவும் பொறாமை கொள்ளவும் செய்தேன். என்னிடம் உங்களை பற்றிய வர்ணனைகள் கேட்ட போதே , உங்களுக்கு ஏற்றவன் யென்று என் காதல் குறிப்புகள் பேசப்பட்ட சின்ன பாக்கியம் பெற்றவன் யென ஆகி விட்டேன். மன்னிக்கவும் என்னுடைய அபிப்பிராயத்தின் படி. தங்கள் அபிப்பிராயம் வேறு ஆடவனாக கூட இருக்கலாம். ஆனால் நானோ உங்களை எந்த ஆடவனுக்கு விட்டு கொடுக்காத நிலைக்கே வந்து விட்டேன். . பிறகு ஒரு நாளில் , போனில் உங்களிடம் கிறிஸ்துவ முறைப்படி எப்படி திருமணம் நடக்கும் யென தெரிய தனமாக கேட்டு தொலைந்து விட்டேன். நீங்கள் உங்கள் வார்த்தைகள் பிசகமால் சொன்னீர்கள். முதலில் ஆடவன் வீட்டிலிருந்து பெண் வீட்டிற்குபைபிள் கொடுப்பார்கள். பிறகு நிச்சயம் , திருமணத்தின் போது மோதிரம் அணிவது , பிறகு தங்க சங்கிலி அணிந்தால் போதும் என்றீர்கள். அதை கேட்ட பின் உங்களுடன் முகம் கொடுத்து என்னால் பேச முடிய வில்லை . என் அறை கதவை சாத்தி விட்டு தலையனையில் முகம் புதைத்து படுத்து கொண்டேன். அம்மா வந்து சத்தம் போட்டாள். நான் எழுந்திருக்கவேயில்லை­. என் மனம் கதறி கொண்டிருந்தது. அந்த நாள் உங்களுக்கு வரும் மெர்சி . நான் எப்படி அந்த நாளை கடப்பேன்.உங்களுக்கு இன்னொரு ஆடவனோடு திருமணம் நடப்பதை எப்படி தாங்கிகொள்வேன் மெர்சி. சிறிது நேரம் கழித்து எழுந்து சென்று முகத்தைகண்ணாடியில் பார்த்தேன். கண்கள்சிவந்து குளமாகியிருந்தது. எதனால் மெர்சி ? . பிறகு ஒருநாள் நீங்கள் திருமணம்செய்தால் கண்டிப்பாக ஒரு கிறிஸ்துவனை தான் செய்வேன் என்றீர்கள். காதலிப்பதற்காக இருந்தாலும் ஒரு கிறிஸ்துவனை செய்வேன் என்றீர்கள். எதற்காக இப்படி உங்களிடம் பழகிக்கொண்டிருக்கிறே­ன் என்னை நானே நொந்துக்கொண்டேன். பிறகு நான் சொன்னேன் , உங்கள் மதத்திலேஆண்ணை திருமணம் செய்வது நல்ல விஷயம் தான். எந்த பிரச்சினையும் வராது. ஆனால் காதல் உங்கள் மனம் சொல்லி வருவது. உண்மையான காதல் மதம் பார்க்காது. உங்கள் மனம் சொல்லும் ஆடவனை மதம் பார்க்கமால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். . நான் மனமுவந்து என் காதலை சொல்லவே இல்லாத போது , எனக்கு அந்த தகுதி இருக்கிறாத என அறிந்திராத போது , நீங்கள் என்னைபற்றி என்ன நினைக்கிறீர்களே யெனதெரியாத போதும் , இந்த நேரத்தில்கூட கற்பனைகளில் உங்களோடு நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் மெர்சி , என்ன செய்தாலும் என்னால் தடுக்க முடியவில்லை மெர்சி உங்களோடு கற்பனையில் இந்த வாழ்க்கையில் வாழ்வதை . ஏதோ ஒரு ஞாயிற்று கிழமை , எனது பைக்கில் உங்களை சார்ச்சில் இறங்கி விட வந்தேன். நீங்கள் பச்சை நிறத்தில் புடவை அணிந்திருந்தீர்கள். அந்த சேலையில் உங்கள் இதய பகுதியில் பொன் சாரிகைகளால் சித்திர வேலைப்பாடு செய்ய பட்டிருக்கிறது. கையில் பைபிளோடு நீங்கள் , இறங்கி நின்று பேசினோம். . "ம் புதுசா வேற கல்யாணம் பண்ணனும்டி நல்லா பொண்ணு கிடைக்கனும் வேண்டிங்கோ டி " . "கையில பைபிள் இருக்கு திட்டிறாபோற" . " இல்லைனா " . கீழே குனிந்து செறுப்பை கட்டுகிறீர்கள் மெர்சி . " இதுக்கு தாண்டி , ஹில்ஸ் போட்ட செறுப்பெல்லாம் உனக்கு வாங்கி தர கூடாது எனக்கே காட்டற" . "ம்ம் ஜாக்ராதை" . " ம்ம் எப்போ வருவா " . " 2 மணி நேரம் ஆகும் " . " 2 மணி நேரம் கஷ்டம்டா " . "அய்யோ பீல் பண்றயாக்கு கிளம்புடா குரங்கு " . " ம்ம் முடிஞ்சா அப்புறம் போன் பண்ணு " . "ம்ம்ம்" . அங்கே நம் உரையாடல் முடிந்தது மெர்சி. உடனே நான் கிளம்பவில்லை, . நீங்கள் சாலையை கடக்கும் போது எந்த வாகனத்தின் போக்கும் உங்கள் கண்களில் மிரட்சி ஏற்படுத்தமால் , சிறு கற்கள் உங்கள் கால்களை தடுக்கமால் , பாதனிகளை கவனமாக கழட்ட , பாதனிகள் கழட்டினால் பாதங்கள் பளிங்கு தரையில் அதன் எலும்புகள் இறுக்கம் உணரும் , படிகளில் கவனம் , இருக்கைகள் உங்கள் கைகளை சிராய்ப்புகளை ஏற்படுத்தமால் இருக்க இங்கு இருந்து வேண்டுகிறேன் மெர்சி. உங்கள் நிழல் தேவாலயத்தில் சென்று மறையும் வரை பார்க்கிறேன். வீடு சென்றால் உங்கள் நினைவு. நண்பர்களை பார்க்க செல்கிறேன். உங்களை பற்றி பேச நிறைய கிடைக்கும் . கிளம்புகிறேன் மெர்சி. ( தொடரும் )

22, ஜூலை,2013 , மெர்சி - அத்தியாயம் 1

அன்புள்ள மெர்சி . . . , இன்று உங்களை சந்தித்தேன். பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தீர்கள். ஒற்றை ரோஜாஉங்கள் கூந்தலை அலங்கரித்தது. வெள்ளி நிறத்தாலான வளையங்கள் கொண்ட காதணிகளுக்கு மாறியிருந்தீர்கள். இரண்டு புருவங்களுக்கிடையே குங்குமமோ (அ) செயற்கை பொட்டோ அற்ற வெற்றிடத்தை அழகின் நேர்த்தி என்பதை திரும்பவும் சொல்கிறேன்.எனினும் அது உங்கள் கிறிஸ்துவ முறை சார்ந்தது. மொத்தத்தில் , ஒரு பூச்செடியின் முந்தைய நாள்களின் கவனம் பெறாத மொட்டாக இருந்த இன்று முழுமையாக மலர்ந்திருக்கும் பூ வாக உங்கள் முகம் பொலிவோடு பூத்திருக்கிறது. இந்த பொன் காலையின் வெளிச்சம் நான் அமர்ந்திருக்கும் சாளரத்தின் வழியே நீங்கள் அமர்ந்திருக்கும்இடம் வரை வந்து சேர்ந்தது மெர்சி . கடவுள் உங்களை இன்று ஆசிர்வதித்தார். இனி உங்களுக்குஎல்லாம் ஜெயம் மெர்சி . வகுப்புக்கள் தொடர்ந்தது. இந்த கொஞ்ச நாட்களாக என்னை எப்போது பார்க்கிறீர்கள் யென்றுதெரிந்து வைத்திருக்கிறேன். விரிவுரையாளர் எங்கள் வரிசையில்யாரவது குறிப்பிட்டு பேசினால் , யாரென்று பார்க்கும் காரணத்தை வைத்து என்னை பார்ப்பீர்கள். அப்படி பார்க்கையில் இது வரை எந்த அசட்டு தனம் செய்யவில்லை யென்று நினைக்கிறேன். மற்ற நேரம் நீங்கள் என்னை பார்க்கவே உங்களுக்கு தோன்றுவதில்லை யென்பதை நினைக்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது மெர்சி. . உங்களை பற்றி தீவிரமாக சிந்தித்தல் , உங்களிடம் சொல்வதற்கு தினமும் குறைந்தது நூறு விஷயமாவது கிடைக்கிறது. பதற்றம் ஆகிறேன். இயலாமை கொள்கிறேன். பயபடுகின்றேன். எல்லாம் , ஒரு சம்பவத்தை இப்போதுநினைவு கூர்கிறேன் மெர்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. உங்களை பற்றியே எழும் எண்ணங்களை தடுக்க , என் டைரியை எடுத்து , " அவளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் திருமணம், அவளை நினைப்பதையோ பார்ப்பதையோ நிறுத்தி விட வேண்டும் " யென்று எழுதினேன் . எழுதி முடிக்கும் போது என் விரல்கள் நடுங்கியது. அடி வயிற்றில் ஒரு பயம் கலக்கமாக இருந்தது. சோகத்தில் ஆழ்ந்தேன். அழுது விடுவேன் போல் இருந்தது. மேற்கொண்டு சிந்திக்கவே திரண் இல்லை. உடனே சென்று ஒரு குவளை நீர் அருந்தினேன். கல்லை விழுங்கியதுபோல் இருந்தது. உடனே , வந்து அந்தகாகிதத்தை கிழித்து ஏறிந்து விட்டேன். முடியவில்லை மெர்சி . எந்த உணர்வலையில் மாட்டியிருக்கிறேன் யென்று எனக்கே தெரியவில்லை மெர்சி. . மதியம் திரும்பவும் சந்திந்தேன். யாரோ ஒரு பெண் கூட பேசிக் கொண்டிருத்தீர்கள். அப்படியே என்னை கவனித்தது போல் இருந்தது. . மதிய வகுப்புகளில் , துறை சார்பாக உங்களுக்கு வேலை இருந்தது என் நண்பர்களோடு நீங்களும் சென்றீர்கள் மெர்சி . என் அன்புக்குரிய மெர்சி யாகிய நீங்கள் , என் கண் முன் பிரிவதை சோகத்தோடு பார்த்து கொண்டிருந்தேன். உங்கள் மீது வைத்த கண்ணை நான் எடுக்க வில்லை,நீங்கள் அறையை விட்டு வெளியேறும் வரை . இந்த ஒரு மணி நேரத்திற்கோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கோ உங்களை பார்க்க முடியாது. பிரிவு வலித்தது. மனம்கனந்தது. உங்களை பற்றியே யோசித்துக்கொண்டிருந்­தேன். . உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் என் நண்பர்கள்எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா . வேலைக்கு இடையில் நீங்கள் சந்தோஷமாக சிரித்து பேசுவதை அவர்கள் ரசிக்கலாம். எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் மெர்சி அதற்கு. நான் பார்க்காத நிகழ்வு அது , நீங்கள்என்னோடு இதுவரை சிரித்து பேசியதேயில்லை . எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா மெர்சி. பிறகு வந்தேன் , நீங்கள் வேலை செய்யும்இடத்திற்கு . உங்களை பார்த்துக்கொண்டிருந்­தேன். நீங்கள் கண்டுக்கொள்ளவேயில்லை­.பொறாமையாக இருந்தது. கை யை நீட்டி எதோ என் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தீ­ர்கள். அப்போது தான் உங்கள் கையை பார்த்தேன். உங்கள் பொன்னிற வளையலை. என் அன்புக்குரிய மெர்சியின் வளையலை பார்த்துவிட்டேன். நினைக்கும் போதே கர்வம் தலைக்கேறியது. . பின்பு மாலையில் எப்போதோ உங்களைபிரிந்து வீடு அடைந்து விட்டேன்மெர்சி. . நேற்று இரவு ஜெபம் செய்ய போவதாக சொல்லி விட்டு சென்றீர்கள் மெர்சி . அந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு கற்பனை , உங்களை பற்றியது. ஒரு புராதன பெரிய வீட்டில் நீங்களும் நானும் வசிக்கிறோம். திருமணத்தை யெல்லாம் கடந்து விட்டிருந்தோம். வீடு முழுக்க கிறிஸ்துவ வாசம். நீங்கள் வீட்டிற்கு கென எளிமையான சேலையில் இருந்தீர்கள். கூந்தலை மீறிய மல்லிகை பூச்சரம் உங்கள் கூந்தலை அலங்கரித்தது. அந்த மல்லிகை பூ வாசம் என்னை மயக்கியது. மதியம் வைத்த மீன் கொழம்பை சூடாக்கி விட்டு ஜெபம் செய்வதற்காக சென்றீருந்தீர்கள்.அந்த நேரங்களில் உங்களுக்காக காத்திருக்கிறேன். அவ்வளவு தான்மெர்சி . என்ன ஒரு அழகான கற்பனை. . இன்னொரு சம்பவம் , விடுமுறைகளில் கிரிக்கெட் விளையாட போக ஒரு அண்ணனோடு பழக நேர்ந்தது. இந்துவாக இருந்து கிறிஸ்துவத்திற்கு தழுவியிருந்தார். அவருடையது காதல் திருமணம் , அந்த பெண் அவருக்காக இந்து மதத்திலிருந்துகிறிஸ்துவ மதத்தையும் தழுவியிருக்கிறார். விளையாட்டு இடையில் என்னோடு பேசினார். நாளைக்கு ஞாயிறு விளையாட வர போவதில்லை . சார்ச்க்கு போகனும், 12 மணிக்கு தான் வருவேன் என்றார். சட்டென்று உங்கள் ஞாபகம் வந்தது மெர்சி. நாளைக்கு நீங்களும் சார்ச்சிற்கு போவதாக சொன்னீர்கள். பிரிவு வலி , உங்களை பற்றிய நினைப்புகள் அதீதமானது. . மைதானத்தில் கடைசியில் நின்றிருந்தேன். பந்தை தடுக்க , உங்களை பற்றிய நினைப்பு தடுக்க முடியவில்லை. பக்கத்தில் ஒரு பெரிய முள் செடி .என் நினைப்பை யெல்லாம் உங்களிடம் சொல்ல ஒரு குருட்டு தைரியம் வேண்டும், அதை இப்போதே பழகு என்று . அந்த முள் செடியை கைகளால் இறுக்க பிடி மனம் சொன்னது. பயந்து நடுங்கினேன். கண்களை மூடி உங்கள் பெயரை சொன்னேன். நினைத்தேன். இறுக பிடித்தேன் முள் செடியை. சில சிராய்ப்புகள்,அந்த முற்களை நான் இறுக்க பிடித்திருந்தேன்.

6,ஜூலை,2013 . A poem about her husband

உங்க கண்ணில் தெரிவான் ஜோ அவன் , அந்த நாள் தொலைவில் இல்லை. அவன் அன்பானவன் , மென்மையானவன் , எதையும் உங்களுக்காக விட்டு கொடுப்பான் , எதையும் செய்வான் உங்களுக்காக ஜோ. அதிக கோபம் கொண்டவன் , மென்மையானவன் இதில் யார் பலமானவன் நினைகிறீங்க ஜோ. ?நான் சொல்றேன் ஜோ . மென்மையானவன். உங்க வாழ்க்கையில் வந்த அந்த மென்மையானவன் ஜோ. அவன் கஷ்டத்தை உங்க கிட்ட காட்ட மாட்டான் ஜோ. நீங்க கண்டுபிடிக்க முடியாது. . அந்த மென்மையானவனை பெரியவங்களுக்கு மட்டுமில்லை. உங்க வீட்டில உங்க அக்காவோட குழந்தைகள் வளர்ந்த அந்த குழந்தைகளுக்கு பிடிக்கும் ஜோ. நீங்க தா அவனுக்காக காத்திருக்கனும். நீங்க தா சொல்லனும். "எப்பபாரு சின்ன குழந்தைக்களோட விளையாட்டு னு , என்னை கூட கவனிக்காம " அப்படினு நீங்க தா அவனை கன்டிக்கனும் ஜோ. . நீங்க வாழ போன வீட்டில அவன் உடன்பிறப்பு சார்ந்த அந்த பெண்கள் உங்களோட சண்டை , சச்சரவு செய்தால் , உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்ட அவன் உங்க கண்ணீரை தொடைச்சிட்டு , உங்க தோள் மேல சாய்ந்து சொல்வான். " விட்டு கொடுப்பது தா அன்பு. எனக்காக ப்ளீஸ்" சொன்ன பிறகு அவன் கண் கலங்கியிருக்கும் அதை தவறாம கவனிப்பீங்க ஜோ. . உங்களுக்கு குழந்தை பிறந்து பின் நீங்க சில மாதம் அம்மா வீட்டில் இருப்பீங்கா ஜோ . ஒரு நாள் முற்பகலில் அவனை பார்க்க ஏங்கி நினைப்பீங்க ஜோ , உங்க முன்னாடி வந்து நிற்பான் ஜோ காதலோட . எவ்வளவு தொலைவையு தாண்டி வருவான் ஜோ. உங்களை பார்க்க . நீங்க உங்க மனசில காதலை மறைச்சிட்டு கேப்பீங்கா ஜோ . " வேலைக்கு போகலையா ? "

My unusual letter for you jo( 27.6.2013 )

அன்புள்ள ஜோ . . . , உங்களை இன்று சந்தித்தேன். சிவப்பு நிறத்திலும் , அதன் ஒரங்களில் தங்க சாரிகைகளால் ஆன சுடிதார் அணிந்திருந்தீர்கள். மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தல் , இரண்டு புருவங்களுக்கிடையே குங்குமமோ (அ) செயற்கை பொட்டோ அற்ற வெற்றிடத்தை அழகின் நேர்த்தி என்பதை உங்கள் இன்று பார்த்த பின்பு தான் கண்டுக்கொண்டிருக்கிற­ேன். எனினும் அது உங்கள் கிறிஸ்துவ முறை சார்ந்தது. மொத்தத்தில் , ஒரு பூச்செடியின் முந்தைய நாள்களின் கவனம் பெறாத மொட்டாக இருந்த இன்று முழுமையாக மலர்ந்திருக்கும் பூ வா உங்கள் முகம் பொலிவோடு பூத்திருக்கிறது. . காலையிலே பார்த்து விட்டேன் உங்களை. அதற்கு பிறகு உங்கள் இடம் காலியாக இருந்தது. உங்களை காணவில்லை. வகுப்பிருக்கும் வாரண்டாவில் உங்கள் நிழல் தெரியாத யென்று காத்திருந்தேன்.பிறகு வந்தீர்கள். உங்கள் இடத்திற்கு , மனம் பரவசம் ஆனது. வருகை பதிவேட்டில் உங்கள் பெயரைஅழைக்கும் போது ஒரு பெருமிதம் . அட அட ! இவள் என் படைப்புக்களை விரும்பும் பெண். உங்கள் பெயரை அழைக்கும் அந்த விரிவுரையாளர்க்கு என்ன தெரியும் உங்களை பற்றி. இந்த வகுப்பறையில் நீங்கள் சாதாரண மாணவி என்பதை தவிர. நான் சொல்லட்டுமா உங்களை பற்றி அந்த விரிவுரையாளரிடம் , நீங்கள் எப்படி பட்டவள் யென்று . என்னறியும் அறியமால் மனதிற்குள்பெருமிதமாக சொல்லிக்கொண்டேன். மென்மையாக உங்கள் வருகையை பதிவுசெய்தீர்கள். நீங்கள் இங்கே இருப்பதை நினைக்கும் போதே , ஏதோ புரியாத சந்தோஷம் கொள்கிறேன். . எனக்கு பக்கவாட்டில் உள்ள சாளரத்திற்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள­். என் வார்த்தைகளுக்கு முகம் கொடுத்துபேசும் ஒரே பெண் நீங்கள் , என்னை திரும்பி பார்க்க நேரிடலாம் , அப்போது அசட்டு தனமாக எதையும் செய்து விட கூடாது என்பதில் பொறுப்பாக இருக்கிறேன். . அடுத்த நடந்த பாட வகுப்பில் , மேடம் சொன்னதை அத்தனையும் குறிப்பு எடுத்து வைத்து கொண்டுபொறுப்பாக பதில் சொன்னீர்கள். பிறகு நான் இப்படி நினைத்து கொண்டேன் : . நீங்கள் பொறுப்பான அழகான பெண். உங்களுக்கு நெருக்கமான ஆண் நண்பர்கள் , எனக்கு பழக்கமான அதேஆண் நண்பர்கள் இந்த விஷயம் தெரிந்தால் , உறுதியாக எனக்கு மட்டும் பழி வந்து சேரும். அழகானபெண் என்றால் அபலை யென அந்த பெண்களுக்கு எதிராக நடக்கும் சின்ன பிரச்சினைக்கு கூட குரல் கொடுக்க குறிப்பிட்ட ஆண் நண்பர்கள் எல்லாம் இடத்திலும் இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பர்கள் இப்படி நினைக்கலாம் ," ஜோவிற் எதுவும் தெரியாது , அவள்நல்லவள் . ஏதோ நான் தான் தவறான கண்ணோட்டத்தில் பழகி கொண்டிருப்பதாக " வெளிப்படையாக இந்த கேள்வியை கேட்டு விட்டால் ,என் முன்னே . நான் என்னையே வெறுத்து விடுவேன். உங்களுக்கு எதிராக நான் நடப்பதாக யாரவது குறிப்பிட்டாள் , என்னால் தாங்க முடியாது ஜோ. அப்படி நடந்தால் , யார்க்கும் முகம் கொடுத்து பேச மாட்டேன். என் முகத்தை பார்த்து அருவறுப்பேன். இந்த கொஞ்சம் கல்லூரி நாட்கள் நரகமாக தெரியும். . அடிப்படையாக , உங்களுக்கு எதிராக செயல்படும் மனம் கிடையாது. அந்த தைரியம் கிடையாது. உங்களுக்காக எழுதப்பட்ட இந்த வரிகள் கூட தவறாக இருப்பதாக கூறி அழிக்க சொன்னால் கூட , இப்போதே அழித்து விடுவேன் ஜோ உங்களுக்காக. நீங்கள் வெறுக்கும் எதையும் என்னால் செய்ய முடியாது. நான் மதிக்கும் பெண் நீங்கள் என்ற காரணத்தினால் ஜோ. . மதியம் சந்தித்தேன் . எங்கள் வரிசையில் ஒரு நண்பன் உங்களை அழைக்கும் குரல் , நீங்கள் என்ன பேசுவீர்கள் ? கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்­தேன். அதுஏனோ நீங்கள் என் வகுப்பறையில் இருக்கும் போது , என் அணுகு முறை மாறுகிறது. . லேப் வகுப்புகளில் , உங்களுக்கு எதிராக இடம் கிடைத்தது. நிமிர்ந்து பார்த்தால் நீங்கள் தெரிந்தீர்கள். உங்கள் நெற்றியில் , கிறுக்கியதாக விழும் சில முடிகளை பார்த்தேன். கவிதையாக இருந்தது. உங்கள் பக்கத்திலிருந்த என் தோழியிடம் பேசினேன். பதற்றமாக இருந்தது. உங்கள் முன் வார்த்தைகள் தடுமாறி விடுவேனோ என்று. நீங்கள் சிரித்ததாக தெரிந்தது ஜோ. . கல்லூரி முடிந்து பிறகு பார்க்கவேயில்லை. உங்களுக்கு முன்னே பேருந்து ஏறிவிட்டேன். ஆனால் உங்களை பற்றி நினைத்தேன். இரவு வாடிக்கையான விசாரிப்புகளுக்கு பின் , சில sms தவிர , பின் ஒழுங்காக எந்த sms யும் உங்களிடமிருந்து பெற முடியவில்லை. sms காலியாகி விட்டதாக சொன்னீர்கள் ஜோ. பொறாமையாக இருந்தது. யாரிடம் பேசினீர்கள் யென கேட்க தோன்றியது . பின் எதையும் மீறக்கூடாது யென கேட்கவில்லை. பிறகு இரவில் எப்போது நினைத்தேன் என்று தெரியவில்லை. எப்போதோ தூங்கி விட்டிருந்தேன். . அவ்வளவுதான் இந்த ஒரு நாள் ஜோ. . நன்றி . இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள , உங்கள் நண்பன்.

24, ஜூன் , 2013 . இது மாலை நேரத்து மயக்கம் குறு நாவல் - இடை செருகல்

சில நேரங்கள் அவள் வகுத்த எல்லை மீறியும் அவளுக்கு பிடிக்காத வகையில் நடந்து கொண்டதாக பட்டது. அவளுக்கு சேலைகள் பிடிக்குமா என்று கேட்டு பின் ," உனக்கு கிளிப்பச்சை நிறத்தில் இலைகள் சித்திர வேலை செய்த , வெள்ளி சாரிகைகள் கொண்டதாகவும் ஒரு சேலை , நட்பாக எடுத்து தர முடியாது . கற்பனையாக நான் எடுத்து தந்ததாக வைத்துக்கொள்" என்றேன். நெருடலாக இருந்தாகவும்அதை மறுக்கவும் செய்தாள். மறுத்து கேள்விகள் கேட்டாள். நான் சமதானம் செய்த பின் கடைசியில் வாங்கி கொள்வதாக சொன்னாள். உண்மையாக அப்படி நடந்தால் என்ன வென்று பட்டது. எனக்கும் அவளுக்குமான அந்த இடைவெளி வருத்தம் கொள்ள செய்தது. . ஒரு இரவில், அம்மா விஷேசத்திற்கு போயிருப்பதாகவும் , பசியோடு காத்திருப்பதாக சொன்னேன். " சமைக்க தெரியுமா. நானே சொல்லி தர்றேன்டா இப்போ நீ சமைக்க . வீட்டில என்ன இருக்குனு பாரு " அவளுடைய பதில் மொழியால் , வெகுவாக வந்து ஒட்டிக்கொண்டாள் மனதில். அவள் இப்படி விதைப்பது நட்பாக கூட இருக்கலாம்.நானோ காதலுக்காக காத்திருந்தேன் . அம்மா உடனே வந்துவிடுவதாக சமாளித்தேன். "சரியான சோம்பேறி" யென்று திட்டினாள். திட்டுவது கூட பிடித்திருந்தது.

19,ஜூன்,2013

முன்பு எப்போதும் போல் அல்லமால், இதற்கு முன்பு இப்படி ஏற்படும்யென்று கூட நினைந்திராத , வகையில் உன்னை அதிகமாக நினைத்துக்கொண்டிருக்­கிறேன். நட்பு ரீதியாக நெறைய விஷயங்கள் கிடைக்கிறது உன்னிடம் பேச , நட்பு பொதுவானவை . அப்படியே இருந்து விடவும் தோன்றுகிறது. ஒரு அழகான பெண்ணிடம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இப்படி ஒரு பழக்கம் ஒரு புது அனுபவம். எதிர்ப்படும் தேநீர் கடைகளை கண்டால் உன் நினைவு , இங்கே உன்னோடு அமர்ந்திருந்தால் கூட பெரிய விஷேசமாக இருக்கும் யென்று கூட தோன்றுகிறது. நாளைக்கு எனக்கு திருமணமாகி எனக்கு யென வந்தவளுக்கு முன்பே எந்த வித குற்றவுணர்வு மின்றி உன்னை அறிமுகம் செய்ய வேண்டின் எச்சரிக்கையாகவும் பழகி விட தோன்றுகிறது. உன் குறுஞ்செய்தி சொற்கள் எனக்கானது எனினும் அது உன் வாய் வார்த்தைகளாக இருந்தால் இன்னும் நம் நட்பில் அழகாக தெரியும்

16,ஜூன்,2013

காதலில் இது மென் உருகுதல் . என் படைப்புகளை கொண்டாடும் ஒரு பெண்ணை நேரில் கண்டு நட்பாகி விட்ட இந்த இரண்டு தினங்களில் , சொல்ல முடியாத உணர்வுகளுக்கு உள்ளாகி விட்டேன். அவளிடம் கேட்க தேவையில்லை , என் படைப்புகளை பிடிக்கும் என்றால் என்னையும் பிடிக்கும் யென்று. கிறிஸ்துவ பெண் அவள், தேகமும் முகமும் தேர்ந்த கிறிஸ்துவ நிறம். சிரிக்கும் போது தற்காலிகமாக கன்னத்தில் விழும் குழிகள் . ஒவல் ஃபேஸ் , அவள் கழுத்து செயின், அவள் அழகு என்பதை நிர்ணயிக்க இதுவே போதுமானது. @ @ @ அவள் முகத்தை பார்த்து பேச முடியவில்லை , தடுமாற செய்கிறது.அவள் அழகு என்பதை தாண்டி , என் மேலுள்ள மரியாதையால் நான் வார்த்தைகளால் தடுமாற கூடாது என்ற எண்ணம் என்னை நிலைய குனிய வைக்கிறது. எங்கே நான் அவளை காதலித்து விடுவேனோ யென்று பயந்துக்கொண்டிருக்கி­றேன். அதேநேரத்தில் என்னிடம் தலைக்கணமும்இருக்கிறது. நான் காதலிக்கிறேன்யென சொல்லி , அவளிடம் சம்மந்தம் வாங்குவது எளிது யென்று முட்டாள் தனமாக நினைத்துக்கொண்டிருக்­கிறேன். எவ்வளவு பெரிய காரியம்.! அதைவிட காதல் விவகாரம் எங்கள் வீட்டில்தெரிந்ததால் பெரிய பிரச்சினை எதிர்கொள்ள வேண்டி வரும் அது தான் பெரிய பிரச்சினை யென நினைத்துக்கொண்டிருக்­கிறேன். மனமுவந்து எந்த வார்த்தையும் அவளிடம் சொல்ல இந்த நேரத்தில் அது அதிருப்தி தருகிறது @ @ @ எனக்கும் அவளுக்கும் எதோ இருப்பதாக சக மாணவர்கள் பேசினால் கூட அது சுவராசியமாகவும் , பிரமிப்பாகவும் இருக்கும் யென்று கூட தோன்றுகிறது. யாருமற்ற கிளாஸ் ரூம்மில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பகிர்ந்துக்கொண்ட போது , அவள் யாரென்றும் , எப்படிபட்டவள் யென்றும் தெரியாது. எல்லாம் கடந்து அவளிடம் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். நான் அவளிடம் எப்போதோ கூறியது போல் என்னை பற்றி அவள் சித்தியிடம் கூற இனி விஷயம் கூட இருக்கலாம் @ @ @ திடிரென்று ஒரு நினைவு , ஒரு ஏழு வருடங்கள் கழித்து என் அறையில் அவள் இருப்பதாகவும் , அவள் சிவப்பு நிற சேலை அணிந்திருப்பாதகவும்.­ அதன் ஒரங்களில் வெள்ளி நிற சாரிகைகளால் அவளுக்கே யென நைந்த சேலையில் , அப்போது கூட நான் எழுதுவதை நிறுத்தவில்லை. நான் எதோ டிக்டெட் செய்துக்கொண்டிருப்பத­ாகவும். அவளும் அதை எழுதுவதாக. அவள் முகத்தில் முன்னை விட அழகு கூடியிருந்தது. வேறு ஒரு அழகாக இருந்தாள். விஷயமே வேறு. அவள் _ . ஏன் இப்படி நினைக்க தோன்றுகிறது. கடவுளே ! ஒரே நேரத்தில் பிறப்பாகவும் மரணமாகவும் வெளிப்படும் உணர்வுகள். இன்னும் இரண்டும் ஆண்டுகள் அவளோடு இந்த படிப்பை எப்படி கடப்பேன். எந்த எந்த உணர்வுகளுக்கு உள்ளாவேன்.