Saturday, August 3, 2013

24, ஜூன் , 2013 . இது மாலை நேரத்து மயக்கம் குறு நாவல் - இடை செருகல்

சில நேரங்கள் அவள் வகுத்த எல்லை மீறியும் அவளுக்கு பிடிக்காத வகையில் நடந்து கொண்டதாக பட்டது. அவளுக்கு சேலைகள் பிடிக்குமா என்று கேட்டு பின் ," உனக்கு கிளிப்பச்சை நிறத்தில் இலைகள் சித்திர வேலை செய்த , வெள்ளி சாரிகைகள் கொண்டதாகவும் ஒரு சேலை , நட்பாக எடுத்து தர முடியாது . கற்பனையாக நான் எடுத்து தந்ததாக வைத்துக்கொள்" என்றேன். நெருடலாக இருந்தாகவும்அதை மறுக்கவும் செய்தாள். மறுத்து கேள்விகள் கேட்டாள். நான் சமதானம் செய்த பின் கடைசியில் வாங்கி கொள்வதாக சொன்னாள். உண்மையாக அப்படி நடந்தால் என்ன வென்று பட்டது. எனக்கும் அவளுக்குமான அந்த இடைவெளி வருத்தம் கொள்ள செய்தது. . ஒரு இரவில், அம்மா விஷேசத்திற்கு போயிருப்பதாகவும் , பசியோடு காத்திருப்பதாக சொன்னேன். " சமைக்க தெரியுமா. நானே சொல்லி தர்றேன்டா இப்போ நீ சமைக்க . வீட்டில என்ன இருக்குனு பாரு " அவளுடைய பதில் மொழியால் , வெகுவாக வந்து ஒட்டிக்கொண்டாள் மனதில். அவள் இப்படி விதைப்பது நட்பாக கூட இருக்கலாம்.நானோ காதலுக்காக காத்திருந்தேன் . அம்மா உடனே வந்துவிடுவதாக சமாளித்தேன். "சரியான சோம்பேறி" யென்று திட்டினாள். திட்டுவது கூட பிடித்திருந்தது.

No comments:

Post a Comment