Friday, August 16, 2013

15.Aug.2013 . A poem about her hus - 2

அன்புள்ள ஜீவிதா . . . , . உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த பொன் காலையை இப்பொழுது ஞாபகபடுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கடந்தும் போகும் ஒரு அற்புதமான நாள் அது. உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்திருக்கும். சின்ன சின்ன ஆபரணங்களால் உங்கள் உடல் மெருகு உட்டப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் மனம் விரும்பிய சேலையோடு கூடிய , அதிகம் சாரிகைகளால் சித்திர வேலைப்பாடு செய்த சேலையை அணிந்திருப்பீர்கள். நீங்கள் எங்கே பார்த்தாலும் உங்கள் அப்பா , அம்மா , அக்கா , தம்பி மற்றும் உறவினர்கள் முகங்கள் மூலம் மகிழ்ச்சியான தருணத்தை உணர்வீர்கள். உங்கள் மென் கைகள் மருதாணியில் சிவந்திருக்கும். உங்கள் கேசத்தை மீறிய மல்லிகை சரம் உங்களை அழகுபடுத்தி காட்டும். எல்லாரும் நினைக்க கூடும் ஜீவிதா. உங்கள் சம்மதம் ஏற்று அந்த பொன் சங்கிலியை உங்கள் கழுத்தில் அணிவித்து உங்களை வாழ்க்கை துணையாக ஏற்கும் அந்த நபர், இந்த வாழ்க்கையை வாழ கொடுத்து வைத்திருப்பதாக. பிறகு உங்கள் சம்மதம் கேட்கப்படும் . அது மேற்பொற்கான சம்மதம் ஏன் எனில் , அவர் எப்போதோ உங்கள் மனதை தொட்டுருப்பார். நீங்கள் முழு வெட்கத்திற்கான புன்னகையை மறைத்து புன் முறுவல் செய்வீர்கள். அவர் பொன் சங்கிலியை அணிவீப்பார். உங்கள் இருவர் மீதும் பூக்கள் விழும். உங்கள் வாழ்க்கை முழுவதும் துயரற்ற மகிழ்ச்சியை வாழ்வதற்கான பிரார்த்தனை நிறைந்த பூக்கள் அது. பிறகு சந்தோஷமாக வீடு அடைவீர்கள். உணவையும் பழங்களை பங்கு போட்டு சாப்பிடுவீர்கள். சின்ன சின்ன விளையாட்டுகள் விளையாடுவீர்கள். அந்த கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் இருவரும் குழந்தைகளாக மாறி போவீர்கள். உங்கள் நண்பர் , வாழ்க்கை நிகழ்வுகள் பற்றியும் அவரிடம் பகிர்ந்து கொள்வீர்கள். அவரும் அனைத்தையும் பகிர்வார். . திருமணம் முடிந்த அந்த ஒரு வாரங்களுக்குள் இந்த சம்பவம் நடக்கலாம். பொதுவான விஷயங்கள் பேசி பகிர்ந்த பிறகு , பரஸ்பரம் காதலை பரிமாறி கொள்வீர்கள். அந்த நாட்களில் நீங்கள் அளவுக்கு மீறிய கண்ணாடி வளையல்களை கையில் அணிந்திருப்பீர்கள். அந்த இரவுகள் உங்கள் வளையல்கள் சலசலக்கும். உங்கள் உடல் சேலைக்கு பழகி கொண்டிருக்கும் . அந்த இரவில் , உங்கள் கணவன் நெஞ்சோடு சாய்ந்திருப்பீர்கள் . அவர் உங்கள் கூந்தலை ஏந்தி இருப்பார். மௌனங்களால் பேசுவீர்கள். அப்போதே அவர் உங்கள் மிதியிருக்கும் காதலே உடனே சொல்ல தோன்றியிருக்கும். அவர் உங்களின் கண்ணாடி வளையல் ஒன்றை கேட்கலாம். நீங்கள் ஒரு அழகான வளையலை தருவீர்கள். உடனே அந்த வளையலை உடைந்து உங்கள் பெயரை தன் இடது கையில் கீறலாம். நீங்கள் துடித்து போகலாம். இரத்ததை துடைத்து அவர் நெஞ்சோடு திரும்ப சாய்ந்து இப்படி கேட்கலாம் : நீங்க காதலிக்குகிறீங்கா எனக்கு புரியுது. அதுக்காக இப்படியா ?. சந்தோஷமாக உணர்வீர்கள். உங்கள் மருதாணி கைகள் உங்கள் கணவரின் முத்தங்களால் நிறையலாம். உங்கள் நெற்றி , புருவம் , கண்கள் , மூக்கு , கன்னங்கள் , உதடுகள் யென அளக்க முடியாத முத்தங்களால் நனையலாம். அப்படி யொரு முத்தத்தை அனுபவித்திருக்கவே மாட்டீர்கள். அந்த இரவு உங்கள் பிரியங்களால் கொண்ட ஊடலுடன் முடிந்திருக்கும். . பிறகொரு ஒரு நிகழ்வு . ஏதோ வொரு நாளின் மதியத்தில் இது நடக்கலாம். நீங்கள் மங்கலான சிவப்பு நிறத்தில் சேலையும் , கறுப்பு நிறந்தில் ரவிக்கையும் அணிந்திருக்கலாம். அறையின் புழுக்கத்தில் உங்கள் உடல் வியர்ந்திருக்கும். உங்கள் முகம் வியர்வையால் தளர்ந்திருக்கலாம். அப்போது கூட நீங்கள் அழகாகயில்லை யென கூறிவிட முடியாது. உங்கள் வறண்ட கேசம் காற்றில் அலை பாய்ந்த படி இருக்கும். வெளியே பாத்திரங்கள் நீங்கள் கழுவுவதற்காக எடுத்து வைத்திருப்பீர்கள். வெறுமனே உங்கள் கணவரிடம் பேசி கொண்டிருப்பீர்கள். உடனே கூட இதை சொல்லலாம் : . " உறப்பட்ட வேலை இருக்கு. நான் போய் வேலையை பார்க்கறேன் " எழுந்து போகும் உங்களின் கையை அவர் பிடிக்கலாம். கொஞ்சம் நேரம் எதாவது பேசு உங்களிடம் கெஞ்சி கேட்கலாம். மெதுவாக அவர் உங்களுக்காக பாட கூட செய்யலாம். " மெதுவா பாடு எதையாவது பனி போல் நீங்கும் சுமையானது " நீங்கள் கன்டிப்பாக பேச வேண்டிய நேரம் அது. அந்த உரையாடல் மிக நெருக்கத்தோடு கூடிய இதழ் முத்தங்களுடன் கூட முடியலாம். . எப்போவதது என்னை சந்திப்பீர்கள் ஜீவிதா . இந்த உலகத்தின் கூரையில் நானும் இருப்பேன். அது ஒரு பொன் மாலையில் நிகழலாம். நீங்கள் செக்-அப் பிற்கு போயிட்டு வருவதாக கூட என்னிடம் சொல்லலாம். நான் புரிந்து கொள்வேன் ஜீவிதா. நல்ல விஷயம் என்று. உங்கள் கணவர் என்னிடம் மரியாதையாக பேசுவார். எனக்கு தெரியும் அவர் மென்மையானவர் யென்று. நலம் விசாரிப்புகளுக்கு பிறகு உங்கள் கணவரோடு சேர்ந்து என்னிடமிருந்து மகிழ்ச்சியாக விடை பெறுபவீர்கள். பிரிந்து செல்லும் போது உங்கள் கணவன் உங்களிடம் பேச காத்திருப்பார். அவர் இதை சொல்லலாம் : "நல்ல ரிபோர்ட் தா சொன்னாங்கா டாக்டர். கன்டிப்பாக எனக்கு இன்னொரு ஜோ கிடைப்பா. " சந்தோஷமான வார்த்தைகள் . அதற்கு நீங்க நடந்த படி சிரிப்பீங்க . அதற்கு பிறகு உங்கள் கணவன் பேசிய எந்த வார்த்தையும் எனக்கு கேட்டிருக்காது. நீங்களும் உங்கள் கணவரும் கொஞ்சம் தள்ளி நடந்து சென்று உலகத்தோடு கலந்திருப்பீங்க. அதற்கு பிறகு சில மாதங்களுக்கு கழிந்து, எனக்கு குழந்தை பிறந்த தகவல் சொல்வீங்கா ஜீவிதா.

No comments:

Post a Comment