Saturday, August 3, 2013

22, ஜூலை,2013 , மெர்சி - அத்தியாயம் 1

அன்புள்ள மெர்சி . . . , இன்று உங்களை சந்தித்தேன். பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தீர்கள். ஒற்றை ரோஜாஉங்கள் கூந்தலை அலங்கரித்தது. வெள்ளி நிறத்தாலான வளையங்கள் கொண்ட காதணிகளுக்கு மாறியிருந்தீர்கள். இரண்டு புருவங்களுக்கிடையே குங்குமமோ (அ) செயற்கை பொட்டோ அற்ற வெற்றிடத்தை அழகின் நேர்த்தி என்பதை திரும்பவும் சொல்கிறேன்.எனினும் அது உங்கள் கிறிஸ்துவ முறை சார்ந்தது. மொத்தத்தில் , ஒரு பூச்செடியின் முந்தைய நாள்களின் கவனம் பெறாத மொட்டாக இருந்த இன்று முழுமையாக மலர்ந்திருக்கும் பூ வாக உங்கள் முகம் பொலிவோடு பூத்திருக்கிறது. இந்த பொன் காலையின் வெளிச்சம் நான் அமர்ந்திருக்கும் சாளரத்தின் வழியே நீங்கள் அமர்ந்திருக்கும்இடம் வரை வந்து சேர்ந்தது மெர்சி . கடவுள் உங்களை இன்று ஆசிர்வதித்தார். இனி உங்களுக்குஎல்லாம் ஜெயம் மெர்சி . வகுப்புக்கள் தொடர்ந்தது. இந்த கொஞ்ச நாட்களாக என்னை எப்போது பார்க்கிறீர்கள் யென்றுதெரிந்து வைத்திருக்கிறேன். விரிவுரையாளர் எங்கள் வரிசையில்யாரவது குறிப்பிட்டு பேசினால் , யாரென்று பார்க்கும் காரணத்தை வைத்து என்னை பார்ப்பீர்கள். அப்படி பார்க்கையில் இது வரை எந்த அசட்டு தனம் செய்யவில்லை யென்று நினைக்கிறேன். மற்ற நேரம் நீங்கள் என்னை பார்க்கவே உங்களுக்கு தோன்றுவதில்லை யென்பதை நினைக்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது மெர்சி. . உங்களை பற்றி தீவிரமாக சிந்தித்தல் , உங்களிடம் சொல்வதற்கு தினமும் குறைந்தது நூறு விஷயமாவது கிடைக்கிறது. பதற்றம் ஆகிறேன். இயலாமை கொள்கிறேன். பயபடுகின்றேன். எல்லாம் , ஒரு சம்பவத்தை இப்போதுநினைவு கூர்கிறேன் மெர்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. உங்களை பற்றியே எழும் எண்ணங்களை தடுக்க , என் டைரியை எடுத்து , " அவளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் திருமணம், அவளை நினைப்பதையோ பார்ப்பதையோ நிறுத்தி விட வேண்டும் " யென்று எழுதினேன் . எழுதி முடிக்கும் போது என் விரல்கள் நடுங்கியது. அடி வயிற்றில் ஒரு பயம் கலக்கமாக இருந்தது. சோகத்தில் ஆழ்ந்தேன். அழுது விடுவேன் போல் இருந்தது. மேற்கொண்டு சிந்திக்கவே திரண் இல்லை. உடனே சென்று ஒரு குவளை நீர் அருந்தினேன். கல்லை விழுங்கியதுபோல் இருந்தது. உடனே , வந்து அந்தகாகிதத்தை கிழித்து ஏறிந்து விட்டேன். முடியவில்லை மெர்சி . எந்த உணர்வலையில் மாட்டியிருக்கிறேன் யென்று எனக்கே தெரியவில்லை மெர்சி. . மதியம் திரும்பவும் சந்திந்தேன். யாரோ ஒரு பெண் கூட பேசிக் கொண்டிருத்தீர்கள். அப்படியே என்னை கவனித்தது போல் இருந்தது. . மதிய வகுப்புகளில் , துறை சார்பாக உங்களுக்கு வேலை இருந்தது என் நண்பர்களோடு நீங்களும் சென்றீர்கள் மெர்சி . என் அன்புக்குரிய மெர்சி யாகிய நீங்கள் , என் கண் முன் பிரிவதை சோகத்தோடு பார்த்து கொண்டிருந்தேன். உங்கள் மீது வைத்த கண்ணை நான் எடுக்க வில்லை,நீங்கள் அறையை விட்டு வெளியேறும் வரை . இந்த ஒரு மணி நேரத்திற்கோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கோ உங்களை பார்க்க முடியாது. பிரிவு வலித்தது. மனம்கனந்தது. உங்களை பற்றியே யோசித்துக்கொண்டிருந்­தேன். . உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் என் நண்பர்கள்எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா . வேலைக்கு இடையில் நீங்கள் சந்தோஷமாக சிரித்து பேசுவதை அவர்கள் ரசிக்கலாம். எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் மெர்சி அதற்கு. நான் பார்க்காத நிகழ்வு அது , நீங்கள்என்னோடு இதுவரை சிரித்து பேசியதேயில்லை . எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா மெர்சி. பிறகு வந்தேன் , நீங்கள் வேலை செய்யும்இடத்திற்கு . உங்களை பார்த்துக்கொண்டிருந்­தேன். நீங்கள் கண்டுக்கொள்ளவேயில்லை­.பொறாமையாக இருந்தது. கை யை நீட்டி எதோ என் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தீ­ர்கள். அப்போது தான் உங்கள் கையை பார்த்தேன். உங்கள் பொன்னிற வளையலை. என் அன்புக்குரிய மெர்சியின் வளையலை பார்த்துவிட்டேன். நினைக்கும் போதே கர்வம் தலைக்கேறியது. . பின்பு மாலையில் எப்போதோ உங்களைபிரிந்து வீடு அடைந்து விட்டேன்மெர்சி. . நேற்று இரவு ஜெபம் செய்ய போவதாக சொல்லி விட்டு சென்றீர்கள் மெர்சி . அந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு கற்பனை , உங்களை பற்றியது. ஒரு புராதன பெரிய வீட்டில் நீங்களும் நானும் வசிக்கிறோம். திருமணத்தை யெல்லாம் கடந்து விட்டிருந்தோம். வீடு முழுக்க கிறிஸ்துவ வாசம். நீங்கள் வீட்டிற்கு கென எளிமையான சேலையில் இருந்தீர்கள். கூந்தலை மீறிய மல்லிகை பூச்சரம் உங்கள் கூந்தலை அலங்கரித்தது. அந்த மல்லிகை பூ வாசம் என்னை மயக்கியது. மதியம் வைத்த மீன் கொழம்பை சூடாக்கி விட்டு ஜெபம் செய்வதற்காக சென்றீருந்தீர்கள்.அந்த நேரங்களில் உங்களுக்காக காத்திருக்கிறேன். அவ்வளவு தான்மெர்சி . என்ன ஒரு அழகான கற்பனை. . இன்னொரு சம்பவம் , விடுமுறைகளில் கிரிக்கெட் விளையாட போக ஒரு அண்ணனோடு பழக நேர்ந்தது. இந்துவாக இருந்து கிறிஸ்துவத்திற்கு தழுவியிருந்தார். அவருடையது காதல் திருமணம் , அந்த பெண் அவருக்காக இந்து மதத்திலிருந்துகிறிஸ்துவ மதத்தையும் தழுவியிருக்கிறார். விளையாட்டு இடையில் என்னோடு பேசினார். நாளைக்கு ஞாயிறு விளையாட வர போவதில்லை . சார்ச்க்கு போகனும், 12 மணிக்கு தான் வருவேன் என்றார். சட்டென்று உங்கள் ஞாபகம் வந்தது மெர்சி. நாளைக்கு நீங்களும் சார்ச்சிற்கு போவதாக சொன்னீர்கள். பிரிவு வலி , உங்களை பற்றிய நினைப்புகள் அதீதமானது. . மைதானத்தில் கடைசியில் நின்றிருந்தேன். பந்தை தடுக்க , உங்களை பற்றிய நினைப்பு தடுக்க முடியவில்லை. பக்கத்தில் ஒரு பெரிய முள் செடி .என் நினைப்பை யெல்லாம் உங்களிடம் சொல்ல ஒரு குருட்டு தைரியம் வேண்டும், அதை இப்போதே பழகு என்று . அந்த முள் செடியை கைகளால் இறுக்க பிடி மனம் சொன்னது. பயந்து நடுங்கினேன். கண்களை மூடி உங்கள் பெயரை சொன்னேன். நினைத்தேன். இறுக பிடித்தேன் முள் செடியை. சில சிராய்ப்புகள்,அந்த முற்களை நான் இறுக்க பிடித்திருந்தேன்.

No comments:

Post a Comment