Friday, October 25, 2013

She s child hood

*. உங்க அம்மா பின் சமையல் அறையில் மீன் கொழம்பு தயார் செய்வதற்கு இடையில் வலி அதிகமாகி அவசரமாக ஹாஸ்பிடல் போக அந்த பொன் காலையில் இரண்டாவது பொண்ணு பிள்ளையாக சிறகுகளற்ற தேவதையாக நீங்க பிறந்திருப்பீங்க உங்க முகத்தை பார்த்து உங்க அம்மாவிற்கு உடம்பால் ஏற்பட்ட அத்தனை வலியும் மறந்திருப்பாங்க . . . அந்த கொஞ்ச நாளைக்கு அக்கா பாப்பா எப்படி சிரிக்கிற பாருங்க அக்கா பாப்பா எப்படி அழற பாருங்க யென்று யாராவது உங்களை பார்க்க வரவாங்க கண் வைச்சிருப்பாங்க . . . அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கலை அப்போ நீங்க எப்படி இருந்திருப்பீங்க நான் பார்க்க முடியவில்லை . . *****. அப்போயெல்லாம் அம்மா மடியிலே தான் இருப்பீங்க . . . உங்க அம்மாவை வியாபாரம் செய்ய விடமாட்டிங்க உங்கள் கைக்கு கிடைக்கிற பிளாஸ்டிக் பாக்ஸ்களை எடுத்து பார்த்து கீழே போட்டுட்டு கவிதையாக சிணுங்கலுடன் சிரிப்பீங்க . . . " அட அட போச்சே உன்னை வைச்சுகிட்டு " அம்மா மென்மையாக கண்டிப்பாங்க . . . பிறகு உங்களோடு சேர்ந்து அவங்க கடையை எப்படி பார்த்துக்கா போறாங்க . . . *.மண் பிசைந்து கேசத்தில் அப்பி உதடு பிதுக்கி அக்கா மேல் மண் வாரி போட்டு அக்காவோடு முடியை இழுத்து கட்டு பிடுத்து மண்ணில் உருண்டு சண்டையெல்லாம் போட்டு இருப்பீங்க . . . . *.அப்புறம் உங்களுக்கு ஒரு சின்ன விழா நடந்திருக்கும் நீங்கள் எது கேட்டாலும் வாங்கி தரேன் சொல்லிருப்பாங்க . . . உங்கள் முடிகளை எடுத்திருப்பாங்க . . . காது குத்திருப்பாங்க . . . "அட புள்ள துள்ளிற போற புடிங்களேன் அவளே " அம்மா துடிச்சிருப்பாங்க . . பொம்மையெல்லாம் நிறைய வாங்கி தந்திருப்பாங்க அதெல்லாம் தூக்கி போட்டுட்டு அடம் பிடிப்பீங்க கம்மலை கழட்ட சொல்லி நீங்க சொன்னா பிறகு அவங்க கேட்டு தான் ஆகனும் . . . . *. வெள்ளை கவுன் தலையில் மென் கீரிடம் நிலம் உரசும் வலை யென பரிசுத்தமான தேவதை உடையில் அந்த தேவன் மகளா ஒவ்வோரு பிறந்தநாளை கொண்டாடியிருப்பீங்க அப்போயெல்லாம் யாரவது சொல்வாங்க " பொண்ணு புள்ள பெரிசாயிட்டா உனக்கு ஏத்தவனை உங்க அப்பா எங்கேயிருந்து கொண்டு வர போறாரோ" . *." போடி நாயே பேயே " எல்லாம் அம்மாவை திட்டி இருப்பீங்க . . . "முளைக்கவேயில்லை புள்ளைக்கு பேச்சை பாரு " அம்மா நாலு அடி கொடுத்திருப்பாங்க . . . ஓடி போய் அப்பாவை கட்டிட்டு அழுதிருப்பீங்க. பிறகு அப்படியே அப்பா வோடு தூங்கியிருப்பீங்கா . . . அம்மா ஒரு துளி குறையாத அன்போடு கேட்பாங்க அப்பா கிட்ட "புள்ள தூங்கிட்டளா ? " அந்த அன்பு அப்போ உங்களுக்கு தெரிந்திருக்காது . . . . *."அது அக்காவுக்கு மட்டும் தானா?" என்ன வாங்கிட்டு வந்தாலும் அடம் பிடிப்பீங்க . . இதனால் உங்களுக்கும் உங்க அக்காவுக்கு சண்டை அதிகமாக வந்திருக்கும் நீங்க சொல்றதை தட்ட முடியுமா அம்மா சொல்வாங்க . . . "அது அவளுக்கே கொடுத்து தொலைச்சிரு " . *. நீங்க ஸ்கூல் போகும் தொடக்கத்தில் ஸ்கேல் , பென்சில் நிறைய தொலைச்சிருப்பீங்க . . . உங்களை சமாளிக்க முடியுமா வேற வழி அப்பா உங்களை அடிப்பாங்க . . முதல் அடிக்கே அலறி இருப்பீங்கா பயங்கரமா அழுதிருப்பீங்கா இரண்டாவதாக ஒரு அடி உங்க அப்பா உங்களை அடித்திருக்கமாட்டார் அது ஏன் யென்று அப்போ உங்களுக்கு தெரியவே தெரிந்திருக்காது . . . *. ஒவ்வொரு விடுமுறையும் வீட்டில் சந்தோஷமாக உணர்ந்திருப்பீங்க . . . ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஸ்கூல் போவதில் அம்மா டிபன் பாக்ஸ் தரதிலிருந்து அப்பா ஸ்கூல் கொண்டு வந்து விட்டு கை காட்டி பிரிவதிலிருந்து ஒரு மென் சோகத்தை உணர்ந்திருப்பீங்க . . . அவங்களை இப்பவே திரும்பி பார்க்கனும் ஏங்கி இருப்பீங்க . . . . *. பிறகு எப்போதொ உணர்ந்திருப்பீங்க உங்க அம்மா அப்பா அக்கா உங்களுக்கு தந்த முத்தங்கள் எச்சில் அல்ல அது அன்பு யென்று . . .