Saturday, August 3, 2013

22, ஜூலை,2013 , மெர்சி - அத்தியாயம் 2

நான் என்ன செய்வேன் மெர்சி . உங்கள் பொலிவான உருவம் , வட்ட சிறு முகம் , வாரண்டாவில் உங்கள்நிழல் , உங்களுக்கென்று தேர்ந்து நைந்த உடைகள் , அசைவுகள் , புன்னகை , பார்வைகள் , வார்த்தைகள் யென தினமும் எல்லாம் தரிசிக்கின்றேன் . அது தான் பிரச்சினை . தங்களை தினமும்ரசிக்கும் கலைஞானாக என்னால் என்ன செய்ய முடியும் மெர்சி காதலிக்கதான் முடியும். தங்கள் இதை ஏற்றுக் கொள்ள போவதில்லை புரிகிறது . நீங்களே சொல்லுங்கள் , தங்கள் நடந்து வரும் பாதைகளில் இருபுறமும் நின்று உங்கள் பொன் பாதங்களுக்கு தேவ தூதர்கள் மலர்கள் தூவுவதாக நான் கற்பனை கொள்ளும் அளவிற்கு தேவனின் மகளாக இருக்கிறீர்கள். உங்கள் அழகை தேவர்களே ஆராதிக்கும் போது, நான் ஒரு சிறு மனிதன் . உங்களோடு நெருங்கி பழகும் பாக்கியம் பெற்றவன் எப்படி என்னால் உங்களை காதலிக்கமால் இருக்க முடியும். . இது எப்போதோ முடிவு செய்ய பட்டிருக்கிறது மெர்சி . கடந்த எட்டாம் தேதி , என்னோடு படித்த தங்களின் தோழியுமான அவளின் தந்தை மரணத்தை பற்றி யாரோ ஒரு பெண்ணிடம் கூறி இலேசாக கசங்கவும் செய்தீர்கள். அப்பொழுதுதிருந்தே என் மனம் வெளிப்படையாக உங்களை ஏற்று கொள்ளவே செய்தது. பிறகு மனமுவந்து பேசி கொண்டோம். பேச பேச பிரியங்கள் கூடி கொண்டே போகும் பெண்ணாகிவிட்டீர்கள் நீங்கள் . எல்லாம் பேசி தெரிந்துகொண்டோம். நெருக்கமாக பழக செய்தோம். உங்களுக்கேற்ற இளவரசன் நான் அல்லாத போதும் , அந்த இளவரசனுக்காக உங்கள் காதலனுக்காகவும் பொறாமை கொள்ளவும் செய்தேன். என்னிடம் உங்களை பற்றிய வர்ணனைகள் கேட்ட போதே , உங்களுக்கு ஏற்றவன் யென்று என் காதல் குறிப்புகள் பேசப்பட்ட சின்ன பாக்கியம் பெற்றவன் யென ஆகி விட்டேன். மன்னிக்கவும் என்னுடைய அபிப்பிராயத்தின் படி. தங்கள் அபிப்பிராயம் வேறு ஆடவனாக கூட இருக்கலாம். ஆனால் நானோ உங்களை எந்த ஆடவனுக்கு விட்டு கொடுக்காத நிலைக்கே வந்து விட்டேன். . பிறகு ஒரு நாளில் , போனில் உங்களிடம் கிறிஸ்துவ முறைப்படி எப்படி திருமணம் நடக்கும் யென தெரிய தனமாக கேட்டு தொலைந்து விட்டேன். நீங்கள் உங்கள் வார்த்தைகள் பிசகமால் சொன்னீர்கள். முதலில் ஆடவன் வீட்டிலிருந்து பெண் வீட்டிற்குபைபிள் கொடுப்பார்கள். பிறகு நிச்சயம் , திருமணத்தின் போது மோதிரம் அணிவது , பிறகு தங்க சங்கிலி அணிந்தால் போதும் என்றீர்கள். அதை கேட்ட பின் உங்களுடன் முகம் கொடுத்து என்னால் பேச முடிய வில்லை . என் அறை கதவை சாத்தி விட்டு தலையனையில் முகம் புதைத்து படுத்து கொண்டேன். அம்மா வந்து சத்தம் போட்டாள். நான் எழுந்திருக்கவேயில்லை­. என் மனம் கதறி கொண்டிருந்தது. அந்த நாள் உங்களுக்கு வரும் மெர்சி . நான் எப்படி அந்த நாளை கடப்பேன்.உங்களுக்கு இன்னொரு ஆடவனோடு திருமணம் நடப்பதை எப்படி தாங்கிகொள்வேன் மெர்சி. சிறிது நேரம் கழித்து எழுந்து சென்று முகத்தைகண்ணாடியில் பார்த்தேன். கண்கள்சிவந்து குளமாகியிருந்தது. எதனால் மெர்சி ? . பிறகு ஒருநாள் நீங்கள் திருமணம்செய்தால் கண்டிப்பாக ஒரு கிறிஸ்துவனை தான் செய்வேன் என்றீர்கள். காதலிப்பதற்காக இருந்தாலும் ஒரு கிறிஸ்துவனை செய்வேன் என்றீர்கள். எதற்காக இப்படி உங்களிடம் பழகிக்கொண்டிருக்கிறே­ன் என்னை நானே நொந்துக்கொண்டேன். பிறகு நான் சொன்னேன் , உங்கள் மதத்திலேஆண்ணை திருமணம் செய்வது நல்ல விஷயம் தான். எந்த பிரச்சினையும் வராது. ஆனால் காதல் உங்கள் மனம் சொல்லி வருவது. உண்மையான காதல் மதம் பார்க்காது. உங்கள் மனம் சொல்லும் ஆடவனை மதம் பார்க்கமால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். . நான் மனமுவந்து என் காதலை சொல்லவே இல்லாத போது , எனக்கு அந்த தகுதி இருக்கிறாத என அறிந்திராத போது , நீங்கள் என்னைபற்றி என்ன நினைக்கிறீர்களே யெனதெரியாத போதும் , இந்த நேரத்தில்கூட கற்பனைகளில் உங்களோடு நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் மெர்சி , என்ன செய்தாலும் என்னால் தடுக்க முடியவில்லை மெர்சி உங்களோடு கற்பனையில் இந்த வாழ்க்கையில் வாழ்வதை . ஏதோ ஒரு ஞாயிற்று கிழமை , எனது பைக்கில் உங்களை சார்ச்சில் இறங்கி விட வந்தேன். நீங்கள் பச்சை நிறத்தில் புடவை அணிந்திருந்தீர்கள். அந்த சேலையில் உங்கள் இதய பகுதியில் பொன் சாரிகைகளால் சித்திர வேலைப்பாடு செய்ய பட்டிருக்கிறது. கையில் பைபிளோடு நீங்கள் , இறங்கி நின்று பேசினோம். . "ம் புதுசா வேற கல்யாணம் பண்ணனும்டி நல்லா பொண்ணு கிடைக்கனும் வேண்டிங்கோ டி " . "கையில பைபிள் இருக்கு திட்டிறாபோற" . " இல்லைனா " . கீழே குனிந்து செறுப்பை கட்டுகிறீர்கள் மெர்சி . " இதுக்கு தாண்டி , ஹில்ஸ் போட்ட செறுப்பெல்லாம் உனக்கு வாங்கி தர கூடாது எனக்கே காட்டற" . "ம்ம் ஜாக்ராதை" . " ம்ம் எப்போ வருவா " . " 2 மணி நேரம் ஆகும் " . " 2 மணி நேரம் கஷ்டம்டா " . "அய்யோ பீல் பண்றயாக்கு கிளம்புடா குரங்கு " . " ம்ம் முடிஞ்சா அப்புறம் போன் பண்ணு " . "ம்ம்ம்" . அங்கே நம் உரையாடல் முடிந்தது மெர்சி. உடனே நான் கிளம்பவில்லை, . நீங்கள் சாலையை கடக்கும் போது எந்த வாகனத்தின் போக்கும் உங்கள் கண்களில் மிரட்சி ஏற்படுத்தமால் , சிறு கற்கள் உங்கள் கால்களை தடுக்கமால் , பாதனிகளை கவனமாக கழட்ட , பாதனிகள் கழட்டினால் பாதங்கள் பளிங்கு தரையில் அதன் எலும்புகள் இறுக்கம் உணரும் , படிகளில் கவனம் , இருக்கைகள் உங்கள் கைகளை சிராய்ப்புகளை ஏற்படுத்தமால் இருக்க இங்கு இருந்து வேண்டுகிறேன் மெர்சி. உங்கள் நிழல் தேவாலயத்தில் சென்று மறையும் வரை பார்க்கிறேன். வீடு சென்றால் உங்கள் நினைவு. நண்பர்களை பார்க்க செல்கிறேன். உங்களை பற்றி பேச நிறைய கிடைக்கும் . கிளம்புகிறேன் மெர்சி. ( தொடரும் )

No comments:

Post a Comment