Saturday, August 3, 2013
6,ஜூலை,2013 . A poem about her husband
உங்க கண்ணில் தெரிவான் ஜோ அவன் , அந்த நாள் தொலைவில் இல்லை. அவன் அன்பானவன் , மென்மையானவன் , எதையும் உங்களுக்காக விட்டு கொடுப்பான் , எதையும் செய்வான் உங்களுக்காக ஜோ. அதிக கோபம் கொண்டவன் , மென்மையானவன் இதில் யார் பலமானவன் நினைகிறீங்க ஜோ. ?நான் சொல்றேன் ஜோ . மென்மையானவன். உங்க வாழ்க்கையில் வந்த அந்த மென்மையானவன் ஜோ. அவன் கஷ்டத்தை உங்க கிட்ட காட்ட மாட்டான் ஜோ. நீங்க கண்டுபிடிக்க முடியாது.
.
அந்த மென்மையானவனை பெரியவங்களுக்கு மட்டுமில்லை. உங்க வீட்டில உங்க அக்காவோட குழந்தைகள் வளர்ந்த அந்த குழந்தைகளுக்கு பிடிக்கும் ஜோ. நீங்க தா அவனுக்காக காத்திருக்கனும். நீங்க தா சொல்லனும். "எப்பபாரு சின்ன குழந்தைக்களோட விளையாட்டு னு , என்னை கூட கவனிக்காம " அப்படினு நீங்க தா அவனை கன்டிக்கனும் ஜோ.
.
நீங்க வாழ போன வீட்டில அவன் உடன்பிறப்பு சார்ந்த அந்த பெண்கள் உங்களோட சண்டை , சச்சரவு செய்தால் , உங்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்ட அவன் உங்க கண்ணீரை தொடைச்சிட்டு , உங்க தோள் மேல சாய்ந்து சொல்வான். " விட்டு கொடுப்பது தா அன்பு. எனக்காக ப்ளீஸ்" சொன்ன பிறகு அவன் கண் கலங்கியிருக்கும் அதை தவறாம கவனிப்பீங்க ஜோ.
.
உங்களுக்கு குழந்தை பிறந்து பின் நீங்க சில மாதம் அம்மா வீட்டில் இருப்பீங்கா ஜோ . ஒரு நாள் முற்பகலில் அவனை பார்க்க ஏங்கி நினைப்பீங்க ஜோ , உங்க முன்னாடி வந்து நிற்பான் ஜோ காதலோட . எவ்வளவு தொலைவையு தாண்டி வருவான் ஜோ. உங்களை பார்க்க . நீங்க உங்க மனசில காதலை மறைச்சிட்டு கேப்பீங்கா ஜோ . " வேலைக்கு போகலையா ? "
My unusual letter for you jo( 27.6.2013 )
அன்புள்ள ஜோ . . . ,
உங்களை இன்று சந்தித்தேன். சிவப்பு நிறத்திலும் , அதன் ஒரங்களில் தங்க சாரிகைகளால் ஆன சுடிதார் அணிந்திருந்தீர்கள். மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தல் , இரண்டு புருவங்களுக்கிடையே குங்குமமோ (அ) செயற்கை பொட்டோ அற்ற வெற்றிடத்தை அழகின் நேர்த்தி என்பதை உங்கள் இன்று பார்த்த பின்பு தான் கண்டுக்கொண்டிருக்கிறேன். எனினும் அது உங்கள் கிறிஸ்துவ முறை சார்ந்தது. மொத்தத்தில் , ஒரு பூச்செடியின் முந்தைய நாள்களின் கவனம் பெறாத மொட்டாக இருந்த இன்று முழுமையாக மலர்ந்திருக்கும் பூ வா உங்கள் முகம் பொலிவோடு பூத்திருக்கிறது.
.
காலையிலே பார்த்து விட்டேன் உங்களை. அதற்கு பிறகு உங்கள் இடம் காலியாக இருந்தது. உங்களை காணவில்லை. வகுப்பிருக்கும் வாரண்டாவில் உங்கள் நிழல் தெரியாத யென்று காத்திருந்தேன்.பிறகு வந்தீர்கள். உங்கள் இடத்திற்கு , மனம் பரவசம் ஆனது. வருகை பதிவேட்டில் உங்கள் பெயரைஅழைக்கும் போது ஒரு பெருமிதம் . அட அட ! இவள் என் படைப்புக்களை விரும்பும் பெண். உங்கள் பெயரை அழைக்கும் அந்த விரிவுரையாளர்க்கு என்ன தெரியும் உங்களை பற்றி. இந்த வகுப்பறையில் நீங்கள் சாதாரண மாணவி என்பதை தவிர. நான் சொல்லட்டுமா உங்களை பற்றி அந்த விரிவுரையாளரிடம் , நீங்கள் எப்படி பட்டவள் யென்று . என்னறியும் அறியமால் மனதிற்குள்பெருமிதமாக சொல்லிக்கொண்டேன். மென்மையாக உங்கள் வருகையை பதிவுசெய்தீர்கள். நீங்கள் இங்கே இருப்பதை நினைக்கும் போதே , ஏதோ புரியாத சந்தோஷம் கொள்கிறேன்.
.
எனக்கு பக்கவாட்டில் உள்ள சாளரத்திற்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். என் வார்த்தைகளுக்கு முகம் கொடுத்துபேசும் ஒரே பெண் நீங்கள் , என்னை திரும்பி பார்க்க நேரிடலாம் , அப்போது அசட்டு தனமாக எதையும் செய்து விட கூடாது என்பதில் பொறுப்பாக இருக்கிறேன்.
.
அடுத்த நடந்த பாட வகுப்பில் , மேடம் சொன்னதை அத்தனையும் குறிப்பு எடுத்து வைத்து கொண்டுபொறுப்பாக பதில் சொன்னீர்கள். பிறகு நான் இப்படி நினைத்து கொண்டேன் :
.
நீங்கள் பொறுப்பான அழகான பெண். உங்களுக்கு நெருக்கமான ஆண் நண்பர்கள் , எனக்கு பழக்கமான அதேஆண் நண்பர்கள் இந்த விஷயம் தெரிந்தால் , உறுதியாக எனக்கு மட்டும் பழி வந்து சேரும். அழகானபெண் என்றால் அபலை யென அந்த பெண்களுக்கு எதிராக நடக்கும் சின்ன பிரச்சினைக்கு கூட குரல் கொடுக்க குறிப்பிட்ட ஆண் நண்பர்கள் எல்லாம் இடத்திலும் இருக்கிறார்கள். அந்த ஆண் நண்பர்கள் இப்படி நினைக்கலாம் ," ஜோவிற் எதுவும் தெரியாது , அவள்நல்லவள் . ஏதோ நான் தான் தவறான கண்ணோட்டத்தில் பழகி கொண்டிருப்பதாக " வெளிப்படையாக இந்த கேள்வியை கேட்டு விட்டால் ,என் முன்னே . நான் என்னையே வெறுத்து விடுவேன். உங்களுக்கு எதிராக நான் நடப்பதாக யாரவது குறிப்பிட்டாள் , என்னால் தாங்க முடியாது ஜோ. அப்படி நடந்தால் , யார்க்கும் முகம் கொடுத்து பேச மாட்டேன். என் முகத்தை பார்த்து அருவறுப்பேன். இந்த கொஞ்சம் கல்லூரி நாட்கள் நரகமாக தெரியும்.
.
அடிப்படையாக , உங்களுக்கு எதிராக செயல்படும் மனம் கிடையாது. அந்த தைரியம் கிடையாது. உங்களுக்காக எழுதப்பட்ட இந்த வரிகள் கூட தவறாக இருப்பதாக கூறி அழிக்க சொன்னால் கூட , இப்போதே அழித்து விடுவேன் ஜோ உங்களுக்காக. நீங்கள் வெறுக்கும் எதையும் என்னால் செய்ய முடியாது. நான் மதிக்கும் பெண் நீங்கள் என்ற காரணத்தினால் ஜோ.
.
மதியம் சந்தித்தேன் . எங்கள் வரிசையில் ஒரு நண்பன் உங்களை அழைக்கும் குரல் , நீங்கள் என்ன பேசுவீர்கள் ? கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தேன். அதுஏனோ நீங்கள் என் வகுப்பறையில் இருக்கும் போது , என் அணுகு முறை மாறுகிறது.
.
லேப் வகுப்புகளில் , உங்களுக்கு எதிராக இடம் கிடைத்தது. நிமிர்ந்து பார்த்தால் நீங்கள் தெரிந்தீர்கள். உங்கள் நெற்றியில் , கிறுக்கியதாக விழும் சில முடிகளை பார்த்தேன். கவிதையாக இருந்தது. உங்கள் பக்கத்திலிருந்த என் தோழியிடம் பேசினேன். பதற்றமாக இருந்தது. உங்கள் முன் வார்த்தைகள் தடுமாறி விடுவேனோ என்று. நீங்கள் சிரித்ததாக தெரிந்தது ஜோ.
.
கல்லூரி முடிந்து பிறகு பார்க்கவேயில்லை. உங்களுக்கு முன்னே பேருந்து ஏறிவிட்டேன். ஆனால் உங்களை பற்றி நினைத்தேன். இரவு வாடிக்கையான விசாரிப்புகளுக்கு பின் , சில sms தவிர , பின் ஒழுங்காக எந்த sms யும் உங்களிடமிருந்து பெற முடியவில்லை. sms காலியாகி விட்டதாக சொன்னீர்கள் ஜோ. பொறாமையாக இருந்தது. யாரிடம் பேசினீர்கள் யென கேட்க தோன்றியது . பின் எதையும் மீறக்கூடாது யென கேட்கவில்லை. பிறகு இரவில் எப்போது நினைத்தேன் என்று தெரியவில்லை. எப்போதோ தூங்கி விட்டிருந்தேன்.
.
அவ்வளவுதான் இந்த ஒரு நாள் ஜோ.
.
நன்றி
.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள ,
உங்கள் நண்பன்.
24, ஜூன் , 2013 . இது மாலை நேரத்து மயக்கம் குறு நாவல் - இடை செருகல்
சில நேரங்கள் அவள் வகுத்த எல்லை மீறியும் அவளுக்கு பிடிக்காத வகையில் நடந்து கொண்டதாக பட்டது. அவளுக்கு சேலைகள் பிடிக்குமா என்று கேட்டு பின் ," உனக்கு கிளிப்பச்சை நிறத்தில் இலைகள் சித்திர வேலை செய்த , வெள்ளி சாரிகைகள் கொண்டதாகவும் ஒரு சேலை , நட்பாக எடுத்து தர முடியாது . கற்பனையாக நான் எடுத்து தந்ததாக வைத்துக்கொள்" என்றேன். நெருடலாக இருந்தாகவும்அதை மறுக்கவும் செய்தாள். மறுத்து கேள்விகள் கேட்டாள். நான் சமதானம் செய்த பின் கடைசியில் வாங்கி கொள்வதாக சொன்னாள்.
உண்மையாக அப்படி நடந்தால் என்ன வென்று பட்டது. எனக்கும் அவளுக்குமான அந்த இடைவெளி வருத்தம் கொள்ள செய்தது.
.
ஒரு இரவில், அம்மா விஷேசத்திற்கு போயிருப்பதாகவும் , பசியோடு காத்திருப்பதாக சொன்னேன். " சமைக்க தெரியுமா. நானே சொல்லி தர்றேன்டா இப்போ நீ சமைக்க . வீட்டில என்ன இருக்குனு பாரு " அவளுடைய பதில் மொழியால் , வெகுவாக வந்து ஒட்டிக்கொண்டாள் மனதில். அவள் இப்படி விதைப்பது நட்பாக கூட இருக்கலாம்.நானோ காதலுக்காக காத்திருந்தேன் . அம்மா உடனே வந்துவிடுவதாக சமாளித்தேன். "சரியான சோம்பேறி" யென்று திட்டினாள். திட்டுவது கூட பிடித்திருந்தது.
19,ஜூன்,2013
முன்பு எப்போதும் போல் அல்லமால், இதற்கு முன்பு இப்படி ஏற்படும்யென்று கூட நினைந்திராத , வகையில் உன்னை அதிகமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். நட்பு ரீதியாக நெறைய விஷயங்கள் கிடைக்கிறது உன்னிடம் பேச , நட்பு பொதுவானவை . அப்படியே இருந்து விடவும் தோன்றுகிறது. ஒரு அழகான பெண்ணிடம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இப்படி ஒரு பழக்கம் ஒரு புது அனுபவம். எதிர்ப்படும் தேநீர் கடைகளை கண்டால் உன் நினைவு , இங்கே உன்னோடு அமர்ந்திருந்தால் கூட பெரிய விஷேசமாக இருக்கும் யென்று கூட தோன்றுகிறது. நாளைக்கு எனக்கு திருமணமாகி எனக்கு யென வந்தவளுக்கு முன்பே எந்த வித குற்றவுணர்வு மின்றி உன்னை அறிமுகம் செய்ய வேண்டின் எச்சரிக்கையாகவும் பழகி விட தோன்றுகிறது. உன் குறுஞ்செய்தி சொற்கள் எனக்கானது எனினும் அது உன் வாய் வார்த்தைகளாக இருந்தால் இன்னும் நம் நட்பில் அழகாக தெரியும்
16,ஜூன்,2013
காதலில் இது மென் உருகுதல்
.
என் படைப்புகளை கொண்டாடும் ஒரு பெண்ணை நேரில் கண்டு நட்பாகி விட்ட இந்த இரண்டு தினங்களில் , சொல்ல முடியாத உணர்வுகளுக்கு உள்ளாகி விட்டேன். அவளிடம் கேட்க தேவையில்லை , என் படைப்புகளை பிடிக்கும் என்றால் என்னையும் பிடிக்கும் யென்று. கிறிஸ்துவ பெண் அவள், தேகமும் முகமும் தேர்ந்த கிறிஸ்துவ நிறம். சிரிக்கும் போது தற்காலிகமாக கன்னத்தில் விழும் குழிகள் . ஒவல் ஃபேஸ் , அவள் கழுத்து செயின், அவள் அழகு என்பதை நிர்ணயிக்க இதுவே போதுமானது.
@ @ @
அவள் முகத்தை பார்த்து பேச முடியவில்லை , தடுமாற செய்கிறது.அவள் அழகு என்பதை தாண்டி , என் மேலுள்ள மரியாதையால் நான் வார்த்தைகளால் தடுமாற கூடாது என்ற எண்ணம் என்னை நிலைய குனிய வைக்கிறது. எங்கே நான் அவளை காதலித்து விடுவேனோ யென்று பயந்துக்கொண்டிருக்கிறேன். அதேநேரத்தில் என்னிடம் தலைக்கணமும்இருக்கிறது. நான் காதலிக்கிறேன்யென சொல்லி , அவளிடம் சம்மந்தம் வாங்குவது எளிது யென்று முட்டாள் தனமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு பெரிய காரியம்.! அதைவிட காதல் விவகாரம் எங்கள் வீட்டில்தெரிந்ததால் பெரிய பிரச்சினை எதிர்கொள்ள வேண்டி வரும் அது தான் பெரிய பிரச்சினை யென நினைத்துக்கொண்டிருக்கிறேன். மனமுவந்து எந்த வார்த்தையும் அவளிடம் சொல்ல இந்த நேரத்தில் அது அதிருப்தி தருகிறது
@ @ @
எனக்கும் அவளுக்கும் எதோ இருப்பதாக சக மாணவர்கள் பேசினால் கூட அது சுவராசியமாகவும் , பிரமிப்பாகவும் இருக்கும் யென்று கூட தோன்றுகிறது. யாருமற்ற கிளாஸ் ரூம்மில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பகிர்ந்துக்கொண்ட போது , அவள் யாரென்றும் , எப்படிபட்டவள் யென்றும் தெரியாது. எல்லாம் கடந்து அவளிடம் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். நான் அவளிடம் எப்போதோ கூறியது போல் என்னை பற்றி அவள் சித்தியிடம் கூற இனி விஷயம் கூட இருக்கலாம்
@ @ @
திடிரென்று ஒரு நினைவு , ஒரு ஏழு வருடங்கள் கழித்து என் அறையில் அவள் இருப்பதாகவும் , அவள் சிவப்பு நிற சேலை அணிந்திருப்பாதகவும். அதன் ஒரங்களில் வெள்ளி நிற சாரிகைகளால் அவளுக்கே யென
நைந்த சேலையில் , அப்போது கூட நான் எழுதுவதை நிறுத்தவில்லை. நான் எதோ டிக்டெட் செய்துக்கொண்டிருப்பதாகவும். அவளும் அதை எழுதுவதாக. அவள் முகத்தில் முன்னை விட அழகு கூடியிருந்தது. வேறு ஒரு அழகாக இருந்தாள். விஷயமே வேறு. அவள் _ . ஏன் இப்படி நினைக்க தோன்றுகிறது. கடவுளே ! ஒரே நேரத்தில் பிறப்பாகவும் மரணமாகவும் வெளிப்படும் உணர்வுகள். இன்னும் இரண்டும் ஆண்டுகள் அவளோடு இந்த படிப்பை எப்படி கடப்பேன். எந்த எந்த உணர்வுகளுக்கு உள்ளாவேன்.
Subscribe to:
Posts (Atom)